உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

133

வழியே திருவள்ளுவர் பெயரை அறிந்தார்! நூலைப் படித்தார்: அதிலே ஒன்றினார். ஒரு புதையலைப் பெற்றார்போலப் பூரித்தார்! திருவள்ளுவர் சிவானந்தரை ஆட்கொண்டார்! மலையாள மொழி பெயர்ப்பைத் தேடிப் பெற்றார் சிவானந்தர்! “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் தவக்குறனைக் கண்டு, தம்மையும் தம்மவரையும் உய்விக்கப் பிறந்தவர் திருவள்ளுவரே எனக்கொண்டார்! அவருள் ஞானபீடம் எழுந்தது!

சிவானந்தர் சொல்கிறார்:

பிற சமயச் செய்திகள் வேற்றுமண் தந்தவை.

திருக்குறட் செய்திகள் இந்த மண்ணில், இந்த மண்ணின் மைந்தர்க்கு அருளப்பட்டவை.

பிறசமய நூல்களில் சொல்லப்படும் தலைவர் பிறர் பிறர். திருக்குறளில் சொல்லப்படும் தலைவர் படிக்கும் அவரவரே!

திருக்குறட் சமயம் மலர்ந்தால் தான், இப்பொழுதுள்ள சாதியும் சமயமும் அவற்றின் வேறுபாடுகளும் சின்ன பின்னமாகக் சுழியும்.

1975இல் ஞானபீடம் தொடங்க நினைத்தார் சிவானந்தர்; படிப்படியே செயல்பட்டார். பன்னிரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு பீடங்களைக் கண்டுள்ளார்.

ஒவ்வொரு ஞானபீடத்திற்கும் ஒவ்வொரு மடபதி' அவ்வட்டாரத்து மக்களுள் திருவள்ளுவரைக் குருவாக ஏற்றுக் கொள்பவர் உறுப்பினர். ஒவ்வொரு பீடத்திலும் இருபத்தைவர் முதல் ஐம்பதின்மர்வரை உறுப்பினர் உளர்.

மலையாள மாதத்தின் முதல் நாள்தோறும் வழிபாடு உண்டு. அவ்வழிபாடு காலை 5மணி முதல் 7-30 மணிவரை நிகழும். பிற நாள்களில் வழிபாடு செய்ய வேண்டுமானால் ஏழுநாள்களுக்கு முன்னரே 10 1/2 உரூபா கட்டி, வேண்டிக் கொள்ளல் வேண்டும். ஞாயிறு தோறும் திருக்குறள் விளக்க வகுப்புகள் உண்டு. தட்டாம்படியில் கோபால் குருப்பு என்பார் திருக்குறள் வகுப்பு நடத்துகிறார். ஐயப்பன் என்பார் மடபதியாக உள்ளார்.

.