உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தட்டாம்படிஞானபீடம் போல் பன்னிரண்டு இடங்களில் ஞானபீடம் தோற்று வித்துள்ளனராம். நாற்பத்திரண்டு டங்களில் தோற்றுவிக்கத் திட்டமாம். இப்பொழுது பத்துப் பீடங்களுக்கு, உருவாக்க அடிப்படைப் பணிகள் நிகழ்கின்றனவாம், தேவிகுளம் சார்ந்த சேனாபதி, கோட்டயம் சார்ந்த கூத்தாட்டுகுளம், ஏற்றமானூர். கனகபுழா கொட்டாங் காடு, தோக்குப் பாறை முதலிய, இடங்களில் ஞானபீடத் திருப்பணி சிறந்தோங்குகின்றனவாம். சேனாபதி ஞானபீடமே முதற்பீடமாம்!தட்டாம்படி ஒன்பதாம் பீடமாம்!

இப்பீடங்களைத் தோற்றுவித்த பேரருளாளர் எவர்? பெருஞ்செல்வர் எவர்? என வினா எழுகின்றது! தோற்று வித்த சிவானந்தர் தோன்றுகிறார் நம்முன்னே! ஞானபீடத்தைத் தோற்றுவித்த இவர், கல்வி வளமோ செல்வ வளமோ அறியாத

அந்த ஏழைக்கூலி உழைப்பு மக்கள் உள்ளமாம் பீடத்திலெல்லாம் அமர்ந்து உயிர்க் கோலத்தோடு திகழ்கிறார்: “வழிகாட்டி எப்படி இருக்க வேண்டும்?" என்பதற்கு, “இப்படி இருக்க வேண்டும்" என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் சிவானந்தர். ஆனால் அவர்களை உய்விக்க வந்தமெய்யுணர்வாளர் அவரும் அவ்வேழை மக்களுள் ஒருவர்.

-

செண்ட்டு

வீட்டு

ஐந்து - பத்து டு இட டங்களையன்றி வேற்றிடமென ஒன்றில்லா ஏழை எளிய மக்களின் புன்முறுவலிலே சிவானந்தர் திகழ்கிறார். சிவானந்தர் புன்முறுவலிலே திருவள்ளுவர் உயிர்காட்சி வழங்குகிறார்.

பலசமயங்களை ஆய்ந்தார் சிவானந்தா. அவர் உள்ளத்தை அவை தொடவில்லை. “எங்கெங்கும் ஏற்றத் தாழ்வுகள்! மேடு பள்ளங்கள்! நில அமைப்புப் போலவே மக்கள் நிலையிலும் ஏற்ற இறக்கங்கள்! உள்ளந்தொடாத சமயங்களில் ஒன்றுவதால் என்ன பயன்? பொய்யாக நடித்துக்கொண்டிருக்க ஒரு சமயமா?" எனத் தேடினார்! தேடக் கிடைத்தது ஒரு நூல். சாந்தம் பாறையில் கிடைத்த நூல் ஒரு “சாந்தம் பாறை”யாகத்திகழ்ந்தது. “உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்” என்பது நூலின் பெயர்.

உலகைத் திருத்திய உத்தமர்கள் பதின்மூவர் அந்நூலில் ஓவியமாய் - செய்தியாய் - காட்சி வழங்கினர். அவருள் ஒருவர் திருவள்ளுவர். சிவானந்தர் திருவள்ளுவரை அதற்குமுன் கேட்டும் அறியார்: படத்தைப் பார்த்தும் அறியார். கடைக்காரர்