உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

பூச்சாம்பும் புலத்தாங்கண், காய்ச்செந்நெற் கதிரருந்தி, மோட்டெருமை முழுக்குழவி,

கூட்டுநிழல் துயில்வதியும்,

கோட்டெங்கில் குலைவாழைக்,

காய்க்கமுகிற் கமழ்மஞ்சள்,

இனமாவின் இணர்ப் பெண்ணை,

முதற்சேம்பின் முறையிஞ்சி”

ஓரிலக்கம் பொன்னுக்குரிய இயற்கைப் பரிசு இது

143

கதிரோனைப் பற்றி தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தால் பல்லாயிரம் இருக்கும்: திங்களைப்பற்றிய தமிழ்ப் பாடல்களைத் தொகுத்தாலும் அப்படிப் பல்லாயிரம் இருக்கும். இலக்கியப் புலவர்களுள் எவரும் இவற்றைப் பாடாதிரார். ஆனால் கதிரோன் மறைவுக்கும் திங்கள் வரவுக்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றிப் பாடினோர் அரியர். கலித்தொகையோ அதனைப் பலபடப் பாடுகின்றது. அக்கலி நெய்தற் கலி: அதனை நெய்தவர் நல்லந்துவனார்.

பகை வென்று புகழ் கொண்ட வேந்தன்: அவன் தன்னுயிர் போல் மன்னுயிர் பேணுபவன்: அறவழியில் ஆட்சி நடத்துபவன்: அவன் நற்பயன் துய்க்க வீடு பேறுற்றான்: அது போல் கதிர் களைச் சுருக்கிக் கொண்டு மலைப்பால் மறைந்தான்.

அவன் மறைவால் மக்கள் கொண்ட துயரம் பெரிது அவலம் பெரிது: அல்லல் பெரிது: அந்நிலையை ஒரளவு மாற்றுவான் போல ஒரு வேந்தன் எய்தினான்: அது போன்றது திங்களின் தோற்றம்.

ப்

ஆண்ட வேந்தனுக்கும் ஆளவரும் வேந்தனுக்கும் இடை பட்ட இருட்காலம், கதிரோன் மறைவுக்கும் திங்கள் தோற்றத் திற்கும் இடைப்பட்ட இருட்காலம் போன்றது, அப்பொழுதில், கண்ணை மூடி உறங்குவதுபோல் குவிந்தது தாமரை. தம்புகழைத் தம் முன்னை கூறக் கேட்ட சான்றோர் தலை தாழ்வது போல் மரங்கள் தலை சாய்த்து உறங்கின.

பல்லைக்காட்டி நகைப்பது போலப் புதர்ச் செடிகள்

மலர்ந்தன.