உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம்

18

குழலிசை போல வண்டுகள் இம்மென ஒலித்தன. பறவைகள் குஞ்சை நினைத்துக் கூட்டுக்கு வந்தன. கறவைகள் கன்றை நினைத்து வீட்டுக்கு வந்தன.

மற்றை மற்றை விலங்குகளும் தாம் தங்குமிடம் சேர்ந்தன. இவ்வாறு விரிய விரியக் கூறுகின்றது கலித்தொகை.

இயற்கையினிடையே இயற்கை வாழ்வு வாழ்ந்தவர் சங்கச் சான்றோர். அவர்களின் பாடல்கள் இயற்கைக் களஞ்சியம்: இயற்கைக் கருவூலம்: இயற்கைப் பெட்டகம்: இயற்கை மணி மாலை: இயற்கை வான்: இயற்கைத் தேன் எல்லாம். எல்லாம் இயற்கை இயக்கம்.

அவ்வியற்கைப் பண்ணிசையில் உள்ளத்தையும்பறிகொடுத்த தோன்றல் இளங்கோவடிகள். இயற்கை இசைப்பாடல்களை வரிப்பாடல்களைப் பாடிப் பாடித் திளைத்தவர். அவர் இயற்கைைையத் துய்த்த அளவில் நில்லாமல், இயற்கையையே இறைமையாகக் கண்டும் கொண்டும் வழிபட்டார்.

66

66

66

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்”

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்”

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்”

என்று ஒளியும் வெளியும் வளியும் நீரும் ஆகியவற்றைப் பாராட்டிப் போற்றியதுடன், நிலத்தையும்,

66

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்”

என்றும் பாடினார்.

"நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்” என்பர். நிலமாவது நன்செய். அதில் நெற்பயிர் வளர்ந்து கருக்கொண்டது. அக் கருத் தோற்றம், பச்சைப் பாம்பாகத் தோன்றுகின்றது. கரு வெளி வந்து கதிர் நிமிர்ந்து நிற்கிறது. அது மேன்மைக் குணமில்லாதவர் செல்வச் செருக்கைப் போல் உள்ளது: அக்கதிர், மணி பிடித்து முதிர்ந்து தலை தாழ்கின்றது: அது, கல்வியறிவு மிக்க சான்றோர் பணிவுக்கு ஒப்பாக உள்ளது. இவ்வாறு பாடுகின்றார் சிந்தாமணித் திருத்தக்க தேவர்.