உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம்

18

என இறைவனைக் கூவிக் கூவிக் குரல்தந்து கொஞ்சுகிறாரே வள்ளலார், அவர்தாம் எத்தகைய இயற்கைக் காதலர்! எத்தகைய இறைமைக் காதலர்!

ஆனால் ஓர் இயற்கைக் காவலரும் இம்மண்ணிலே ‘தாயுமானவர்’ என்னும் ஒளிப்பிழம்பாகத் தோன்றினார் என்பதை இம்மண் இன்னும் அறிந்தும் உணர்ந்தும் போற்றவில்லை. வெறுஞ் சொல்லாக அவர் சொல்லைக் கொண்டதே அல்லாமல், பெருஞ் சொல்லாக - பேரரூட் சொல்லாகக் கொள்ளவில்லை

இறைவா உன்னை நெஞ்சார வாழ்த்துகிறேன்: நேயப் பிழம்பாக நின்று வாழ்த்த விரும்புகிறேன்: மற்றவர்களைப் போல உன்னை ஒர் உருவமாக நினைத்து மலர் பறித்து உனக்குச் சார்த்தியும் தூவியும் வழிபட நான் விரும்பவில்லை ஏனெனில் அம்மலராகி நிற்பவன் நீயே. அதன் மலர்ச்சியாய் மணமாய் தேனாய் வித்தாய் விளைவாய் நிற்பவன் நீயே. உன்னைப் பறித்து உன் காலடியில் இட்டு வழிபடுவது விரும்பும் செயலன்றே ஆதலால் பனிதோய்ந்த மலரைப் பறித்து உன் மலரடியில் இட்டு

வணங்கமாட்டேன்!

66

பண்ணேன் உனக்கான பூசை, ஒருவடிவிலே பாவித்திறைஞ்ச

ஆங்கே

பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும்

என்கிறார்.

நண்ணேன்

தாயுமானாரின் 'இயற்கைக் காப்பு' இந்த மண்ணிலே பரப்பப்பட்டிருந்தால் காடு காடாக அழிக்கும் கொடுமை நிகழுமா? வான் வறண்டு போகவும் வளம் வறண்டு போகவும் நேருமா?

குயில் பாட்டுப் பாடிய குயில்பாரதியார். இயற்கையில் திகொண்ட குடிகொண்ட பாவலர் அவர். கதிரோன் காட்சியைப் பாஞ்சாலி சபதத்தில் பாடுகின்றார். காட்டிலே திரிந்தாலும் களிப்பிலே குறையாமல் பாஞ்சாலிக்குப் பார்த்தன் சுட்டிக்காட்டிச் சுடரழகைச் சொல்கின்றான்: