உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

“ பார் சுடர்ப் பருதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ! என்னடீ இந்த வண்ணத் தியல்புகள் எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்! வெம்மைதோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்! பாரடீ! நீலப் பொய்கைகள் - அடடா நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடி! எத்தனை செம்மை! பசுமையும் கருமையும் எத்தனை! கரிய பெரும்பெரும் பூதம் நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட கருஞ்சிக ரங்கள்! காணடி ஆங்கு

147

தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்

இருட்கடல் ஆகா! எங்குநோக் கிடினும்

இயற்கையின் எழுச்சிகளை

ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்”

யெல்லாம்

அழகின்

சிரிப்பெனக் கண்ட அருமைப் பாவலர், பாவேந்தர்! அவர்

எங்கெங்கு அழகைக் கண்டு களிதுளும்புகிறார்:

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்திச்

சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்!

மாலையிலே மேற்றிசையில் இலகுகின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ்

சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்!

திசைகண்டேன்: வான்கண்டேன்: உட்புறத்துச்

செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன்: யாண்டும்

அசைவனவும் நின்றனவும் கண்டேன்: மற்றும்

அழகுதனைக் கண்டேன் நல் இன்பங் கண்டேன்!

பசையுள்ள பொருளிலெலாம் பசையவன்காண்: பழமையினால் சாகாத இளையவள்காண்!