உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. சங்க இலக்கிய இயற்கை வாழ்வியல்

சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டது தொல்காப்பியம், வாழ்வியல் இலக்கியமாகிய பொருளதிகாரத்தைக் கொண்டது அது. அப்பொருளும் அம்மரபும் அவர்க்கு முற்படவே இம்மண்ணின் வளமாக இலங்கியவை என்பது,

66

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப

என்னும் பொருளதிகார முதல் நூற்பாவிலேயே சுட்டப் பட்டு விடுகின்றது.

முதல் கரு உரியென்னும் முப்பொருள்களும் பாடலுட் பயின்று முறை சிறந்திருந்தமையை, மூன்றாம் நூற்பாவே முழங்கு கின்றது. இயற்கையோடியைந்த மனித வாழ்வுச் சிந்தனையில் வைப்பகமும் கருவூலமும் களஞ்சியமும் சங்கத் தொகை நூல்களும் பாட்டுகளுமே யாம் என்பதை விரிக்க வேண்டாமலே விளக்கவல்லவை இவை.

இம் முப்பொருள்களும் விரவியும் பயின்றும் வாரா அகப்பாட்டை அகப்பாட்டு என்பாரார். அத்தகும் அகப்பாட்டு தமிழில் ஒன்றா இரண்டா?1862- என்க.

தமிழ் என்பதன் பொருளே அகத்திணை என்பதாக இருந்ததோர் காலத்தை எண்ணின் இயற்கையோடியைந்த வாழ்வின் சிறப்பு இயல்பாகவே விளங்கும்

வாழ்வியல் இயக்கமா, கல்வியா, கலையைா எல்லாம் எல்லாம் இயற்கையாலேயே கண்டு கொண்டவன் மாந்தன். அவனுக்கு வழி காட்டியாக அமைந்து சொல்லாமல் சொல்லிச் சுடரச் செய்த பல்லான்ற திறக்குருவன், இயற்கையே என்பதை மேலோட்டமாக நோக்குவாரும் அறிவர்.