உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

151

இயற்கையோடியைந்த வாழ்வின் கொடையே மொழி. அவன் ஒலிக்கும் உயிரொலிக் குறுக்க நீட்டங்கள் எல்லாம் உயிரிகளின் ஒலிகள் தாமே இயற்கை இயக்கங்களின் கொடையாக வாய்த்த வளங்களை எல்லாம் அளவிட முடியுமா? ‘ஐ' ‘ஔ' ‘அஃகு'

‘அ ஆ இ ஈ ‘உ ஊ' ‘எ ஏ’ ‘ஒ அ ஆ " என்பவை உயிருணர்வு ஒலிகள் அல்லவோ?

சல் சல்'

'சல சல' 'ஓல்' ‘கல்' இன்னவாறாம் ஒலிக்

குறிப்புச் சொற்களின் வழியாக உண்டாகிய பொருட்சொற்கள் எத்தனை? எத்தனை?

ஒரு சான்று: எவரும் அறிந்த ஒன்று:

‘காகா’ எனக் கரையும் காக்கையை எவரும் ஒலிக் குறிப்புப் பெயரென அறிவார். அதனைக் காணலினும் சற்றே கூர்ஞ்செவியுண்டாயின் ‘கொக் கொக் ’ என்பதால், கொக்கும்: ‘குர்க் குர்க்’ என்பதால் குரக்கும் பெயர் பெற்றன என்பதை அறியக் கூடுமே.

‘கொக் கொக்' என்னும் ஒலிக்குறிப்பு 'கொக்கு' என்னும் பறவைப் பெயரை மட்டுமோ தந்தது

புலவர்களை

மிகக்

கொக்கின் தோற்றம் பழம் கவர்ந்துள்ளது. அதனால், ‘கொக்கின் வெண்ணிறம் மழையில் நனைந்த சுண்ணாம்புச் சுவர் போன்றது” என்றார் ஒரு புலவர் அகம் 346). இன்னொருவர் கொக்கின் வெண்ணிற இறகை, "முழுதுற நரைத்த முதுமகள் ஒருத்தியின் நரைத்தலைக்கு ஒப்பிட்டார்(புறம் 277)

66

மீனைக் கவர்வதற்கு நிற்கும் கொக்கு திருவள்ளுவரைக் கவர்ந்தது. அவர், ஒருவர் எடுத்துக் கொண்ட செயல் நிறைவேறாது என்னும் பொழுதில் கொக்கைப் போல் அமைதியாகப் பொழுதை எதிர் நோக்கிக் கொண்டு இருக்க வேண்டும்: செயலை நிறைவேற்றத் தக்க பொழுது வாய்த்ததும். கொக்கு மீனைக் குத்தி எடுப்பதுபோல் செயலை விரைந்து செய்துவிட வேண்டும்” என்கிறார்(490)

கொக்கின் கால்கள் நீண்டவை: குச்சி போன்றவை: அவற்றின் நெடுமையைக் கருதிப் ‘பைங்காற் கொக்கு, என்றனர். (நெடுநல் 15: புறம் 342). நெடு நெடு என வளர்ந்தவனைக்

L