உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

152

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கொக்கன்’ என்றும் நெடிய கால்களையுடை ‘கொக்குக் காலன்' என்றும் கூறுவது வழக்காகும்.

யவனைக்

கொக்கின் பார்வை, கூர்மையும் வன்மையும் மிக்கது என்பதைக் கூர்மையாய் நோக்கிய புலவர் ஒருவர் 'பார்வல் கொக்கு' என்றார் (பதிற் 21)

கொக்கின் கழுத்தும் வாயமைப்பும் பண்டைப் பொது மக்களைக் கவர்ந்துள்ளன. குறிப்பாகத் தொழிற்றிறம் வல்லவர் களை வயப்படுத்தியுள்ளன. அவ்வமைப்புகளைப் பயன்படுத்திச் சங்கிலிப்பூட்டு வாய்களும் பொருத்து வாய்களும் அமைத்தனர். தம் அமைப்பு முறையை மறவாமல் கொக்கி, கொக்கில், கொக்குவாய் எனப் பெயர்களும் சூட்டினர். நாமும் அப்பெயர் களால் அவற்றை வழங்குவோம் எனினும், கொக்கை மறந்து போனோம்.கொக்கோ, “நம்மைப் பயன்படுத்துவார் மறந்தாலும் நாம் மறக்க மாட்டோம்” என்று நிலை நாட்டிக்கொண்டுள்ளது.

கொக்கிற்கும் குளத்திற்கும் உள்ள தொடர்பு பெரியது. அதனால் கொக்கு குளம், கொக்கர் குளம் கொக்குளம், கொக்காஞ்சேரி எனப் பல ஊர்கள் உள்ளன. "கொக்கிற்கு சென்னியுடையன் கண்டாய்” என்று நாவுக்கசரசரும், 'கொக்கிற்குபாடி' என்று மணிவாசகரும் இறையோடு இயைத்தனர்.

ஓர் னிய கொக்குக் குடும்பம்: சேவற்கொக்கு ஒன்று பேடைக் கொக்கு ஒன்று: பிள்ளைக் கொக்கு ஒன்று: எண்ணிக்கையால் குறைந்த இக்கொக்குக் குடும்பம், எண்ணத்தால் சிறந்தது. ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு ஒன்று ஒன்றுக்காக வாழும் பெருநிலையுடையது.

கொக்குக் குடும்பத்தில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், மாந்தக் குடும்பச் சிறுவர்களால் கொக்குக் குடும்பத்திற்குச் சிக்கல் உண்டாகி விட்டது.

ஆண் கொக்காம் குடுமிக் கொக்கு விடியற்பொழுதிலேயே இரைதேடப் புறப்பட்டது. தனக்காக மட்டுமோ இரைதேடச் சென்றது' பெண்டு பிள்ளைகளைப் பேணிக் காத்தல் அதன் கடனாயிற்றே! அதனால் சென்றது.

சேறும் நீரும் மிக்க ஓரிடத்தை அடைந்தது கொக்கு, அதன் கூரிய பார்வையையும் மறைக்கும் திறமாக வேட்டைச் சிறுவர்