உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

153

கண்ணிமாட்டியிருந்தனர். அவர்கள் இளமை நீங்காப் ‘புன்றலைச் சிறார்’ எனினும் ஆறாம் அறிவினர் அல்லரோ!

காலையில் பிரிந்து சென்ற குடுமிக் கொக்கு, பொழுது மறைந்தும் இருப்பிடத்திற்குத் திரும்பி வரவில்லை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிக்கிடந்தன பெட்டையும் குஞ்சும். பெட்டையும் அழுதது: பிள்ளையும் அழுதது: அடக்க முடியாமல் அழுது வழிந்தன: பலநாள் ஊண் இருத்தலால் பசியால் அவை அழுதன அல்ல! ஊணிருந்தும் அதனை உண்ணாமல் பிரிவாலும் அழுது வழிந்தன? அரற்றுத லோடேயே அன்றை இரவு கழிந்தது!

காக்குக் குடும்பத்தின் அவலத்தை எவரே அறிவார்? கொக்குறை’ என்னும் பெயரமைந்த பனைமட்டையும், அதனிடை இருந்த கூடும். அம்மரமும், உருக்க மிக்க உணர்வால் உயிர்கலந்தொன்றிய அப்புலவர் பெருமான் நக்கீரனாரும் அறிவர். அவர் பாடிய அப்பாடல் பகுதி:

66

குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை இருஞ்சேற் றள்ளல் நாள்புலம் போகிய கொழுமின் வல்சிப் புன்றலைச் சிறாஅர் நுண் ஞாண் அவ்வலச் சேவல் பட்டென அல்குறு பொழுதின் மெல்கிரை மிசையாது பைதற் பிள்ளை தழீஇ ஒய்யென

அங்கட் பெண்ணைஅன்புற நரலும்(அகம்-290)

குடும்பங்களில் நிகழும் குத்து வெட்டு கொலைச் செய்திகளே செய்திகளாய் வரும் இற்றை உலகியலில் கொக்குக் குடும்பச் சீர்மை புலப்படுமா? புலப்பட்டால் வீட்டுக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை: இதனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார் இயற்கையில் இயைந்த இனிய நெஞ்சம் நக்கீரனார்.

சங்கச் சான்றோர் வளமான சொல்லாட்சியர். அவர்கள் ஆண் யானையைக் களிறு என்றனர் பெண் யானையைப் பிடி என்றனர்: இளங்ககன்றைக் கயந்தலை என்றனர். மக்களுள் ஆண் பெண் குழந்தைகளுக்குத் தனித்தனிச் சொற்கள் இருப்பது போல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூடத் தனித் தனிச் சொற்களைப் படைத்துப் போற்றினர்.