உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்

18

களிறும் பிடியும் கயந்தலையுமாகக் காட்டிலே திரிய வேட்டையாளர் விடுவரோ அவற்றை வீழ்த்த ஆழ் குழி தோண்டிப் பொய்யாக மறைக்க யானைக் குடும்பம் விரும்பித் தின்னும் இலை தழைகளைப் பெய்து மூடியுள்ளனர்.

சூழ்ச்சி அறியாப் பிடி இலையுண்ணப் போய்க் குலைபதறக் குழிக்குள் வீழ்ந்தது. பிடி வீழ்ந்துபட்ட கொடுமையைக் களி கண்டது: கலங்கியது: அக்கலக்கத்திலே அறிவை இழந்து வில்லை: மின் தாக்குதலுக்கு ஆட்பட்டவரைக் கட்டிப் பிடித்து விடுவிக்க முடியுமா? மின் துண்டிப்பு அன்றோ உடனே வேண்டும்?

கூட்ட

ம்

காடே அதிரப் பிளிறியது களிறு. யானைகள் கூட்டம் மாக ஒடிவந்தன. குறை தீர்ப்பதற்கு ஒன்றை ஒன்று முந்தி நின்றன. காட்டுயானையின் இத்தன்மை நாட்டு மாந்தர்க்கு உண்டாகிவிட்டால் அஃதன்றோ மண்ணுலகே, விண்ணுலகாய மாண்பாகும்

கூடிய யானைகள் மண்ணைச் சரித்தன: மரங்களைப் பெயர்த்தன: குழி மூடியது,வழி பிறந்தது: பிடியைப் பற்றியுயணைத்துக் களிறு களிப்புடனே வெளியேறியது. களிறும் பிடியும் கண்ட களிப்பு, நொடிப் பொழுதில் ஒழிந்தது. எங்கே அந்தக் கயந்தலை?

பிடியின் கதறல். களிற்றின் பிளிறல், காட்டு யானைகளின் ஒட்டம். அமளிகுமளிப் பேரொலி முழக்கம் இன்னவை யெல்லாம் என்னவெனப் புரியாக் கயந்தலை அச்சத்தால் வெகுண்டு காட்டை விட்டே ஓடிப் போய்விட்டது: ஆயர் குடியிருப்பொன்றை அடைந்து விட்டது!

இளமை மாறாமைச் சான்றாக ஓடிய சிவந்தவாய்க் கயந்தலையை, ஆயச் சிறார் அலைக்கழித்தார் அல்லர்: முதியர் பிடித்தார் அல்லர்: காவல் நாய் கலக்கிற்றில்லை. எரு நிரம்பிய தெருவிலே கட்டிக்கிடக்கும் காரெருமைகளின் ஊடே களிப்போடு விளையாடித்திரிகிறது. கயந்தலை,அவ்வெருமைகளின் காம்பிலே சுரந்த பாலைக் கன்றுகளோடு கன்றாக நின்று பருகித் திளைக்கிறது.

66

சான்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! ஈன்ற குழவி வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டு கொல்?