உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

155

என்று வினாவப்பட்ட வினாவுக்கு, முந்துறவே விடை தந்தாற் போலக் கயந்தலைக் கன்றைக் கான் ஊட்டி மகிழ்ந்தது.

காட்டுக் காதலரைக் காக்க ஒரு கூட்டம்! கலங்கி ஓடிய கயந்தலையைக் காக்க ஒரு கூட்டம்! இத்தகைய காட்டரசும் நாட்டரசும் கூட்டரசாக விளங்க விரும்பினார் சங்கப் புலவர் ஒருவர். அவர் பெயரை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அவர் பாடிய பாட்டேனும் அகப்பாட்டதே என மகிழ்கின்றோம். அகப்பட்டபாட்டு ஒர் அகப்பாட்டே ஆகும் (165). அது

66

என்பது.

கயந்தலை மடப்பிடி பயமபிற் பட்டெனக்

களிறு விளிப்படுத்த கம்பலை பெரீஇ

ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூர் ஆங்கண்

எருமை நல்லான் பெருமலை மாந்தும்"

செறிவுமிக்க ஒரு காடு: அங்கேயுள்ளதொரு பன்றி: காட்டுப்பன்றி: அச்செறிந்த காட்டிலும் வேட்டை நாய்களுடன் நுழைந்து விட்டனர் வேடர்: வேட்டை நாய்களின் பார்வை அப்பன்றியின் பெட்டை மேல் சென்றது. இரண்டு பார்வை களையும் கண்டு கொண்டது காட்டுப் பன்றி..

குட்டிகள் இளையவை: வலியவை: ஆனால் நாயின் சூழ்ச்சித் திறம் அறியாதவை. நாய்கள் குட்டிகளை வெருட்டி வெருட்டி அலைத்தன. குட்டிகள் ஓடி ஓடிக் களைத்தன: தான் வாழும் காட்டில் வேட்டை நாய்கள்புகுந்து படுத்தும் பாட்டைக் கண்டு சிலிர்த்தெழுந்த பன்றி, அந்நாய்கள் அலற அலற அறைந்து தாக்கியது. நாய்கள் கந்து கந்தாக ஓடி ஒளிந்தன.

குட்டிகளைக் காத்த ஆண், பெண் பன்றி மீது பார்வையைச் செலுத்தியது. அதன் மேல் வேடர் கொடிய வில்லை வளைத்துக் கூரிய அம்பைக் கோத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மாறி மாறி அறைந்தது.

கூட்டோடு குடும்பத்தைக் கெடுக்க வந்த கொடுமையை ஒழித்த வீறுடன் பெருமிதமாகப் பெட்டைக் குட்டிகளுடன் நடையிட்டது ஆண் பன்றி. தானைத் தலைவன் ஒருவன் தறுகண் நடையிடுவ தெனத் தோற்றம் தந்தது அது.