உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம்

18

நின்ற காட்டில் இருந்து அயல் காட்டுக்குச் செல்லக் குடும்பத்துடன் நடையிடுகிறது ஆண் பன்றி. இடையே இடுக்குவெளி; இட்டிடை வழி; அதில் வந்து நின்று, இப்பாலும் அப்பாலும் பல்வேறு ஊர்திகள் ஓடும் சாலையைக் கடப்பதற்குப் பார்க்கும் பார்வைபோல் பார்த்து விட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றது.

பன்றியின் வீறுமிக்க பேரையும். குடும்பம் காக்கும் காவல் கடமையையும் தலைமையின் திறத்தையும் கண்டு கண்டு வியந்தான் ஒருவன்! அவன் கண்முன்னே அவன் தலைவன் வீறு தோன்றியது! “படைகள் எல்லாம் தோற்று ஓடும் போதும் தான் ஒருவனே எதிரிட்டு நின்று எதிர்ப்படையை அழித்த அப்பெருமைக்குரியவன் போன்ற தன்றோ இப்பன்றியின் வீறு’ என வியந்தான். எம் பெருவிறல் போன்றது எனப் பாராட்டினான். எய்யக்கோத்த அம்பை எடுத்து வைத்துக்கொண்டு வியந்தான்!

99

வீட்டுக்காவலும் நாட்டுக் காவலும் கைகோத்து நடக்கப் பாட்டோவியம் தீட்டிய பாவலர் குறிஞ்சிக் கபிலர்! இயற்கையோடு இயைந்த மாந்த வாழ்வுச் சிந்தனைதானே

து.

66

வயநாய் எறிந்து வன்பறழ் தழீஇ

இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு

நான் முலைப் பிணவல் சொலியக் கானொழிந்து அரும்புழை முக்கர் ஆட்குறித்து நின்ற

தறுகட் பன்றி நோக்கிக் கானவன்

குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி

மடைசெலல் முன்பில்தன் படைசெலச் செல்லாது

அருவழி விலக்கும்எம் பெருவிறல் போன்மென எய்யாது பெயரும் குன்ற நாடன்.”

(அகம்-248)

கரிய நாவற்கனி ஒன்று வெண்மணல்மேல் பரவிக் கிடந்தது. அதுபொற்றட்டில் மணி பதித்ததெனக் காட்சி வழங்கியது.

நன்றாகப் பழுத்துக் கருநிறங் கொண்ட அக்கனியைக் 'கருவண்டோ' என்று மயங்கியது ஒரு கருவண்டு. அதனால் நெருங்கிச் சென்றது.

உணர்வால் நெருங்கிய கருவண்டோடு, உணவு வேட்கையால் நெருங்கிய நண்டு ஒன்று எதிரிவிட்டு நின்றது.