உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

157

போர்ப்பொருள் நாவற்கனி! போரிடுவன வண்டும் நண்டும்! வண்டு கனியை ‘எடுக்க’ முனைகிறது: நண்டு அதனை 'இழுக்க' முற்படுகிறது. வண்டு மெலியது: நண்டு வலியது. வலியது வெல்லும்; மெலியது தோற்கும்; இயற்கை இது.

66

வலியார்முன் தன்னை நினைக்கத்; தான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து

என்பதை அறிவாளரும் காற்றில் தூற்றிப் பறக்க விடும் போது நண்டுக்குத் தானா நல்லுணர்வு வரும்?

நண்டு வலிமையால் கவர்ந்து கொள்ளப் போகிறது: வண்டு தன் ஆற்றலெல்லாம் கூட்டி பற்றி இழுக்கிறது! இரை கின்றது: ஆர்க்கின்றது: அரற்றுகின்றது. அதன் ஆர்த்தலும் அரற்றலும் வன்மையானவையோ? யாழை மீட்டும் கலைத்திறம் அறியா ஒருவன் மீட்டிய யாழிசை எப்படி இருக்கும், அப்படி சைத்தது அது. நண்டு, ‘நன்று அன்று' என்று மென்மைக்கு இரங்கிவிட்டு விடுமோ? மென்மை இரங்கி அழிய வன்மை ஓங்கி ஓங்கி அழிக்க உலகியல் ஆகிவிட்டால் அறம் என்பதுதான் என்ன? அருள் என்பது தான் என்ன? ஆட்சி என்பதுதான்

என்ன?

ஒரு நாரை பறந்து வருகின்றது, ‘இரை ஏதேனும் கிட்டுமோ?’ என்னும் பார்வையில் பறந்து வரும் நாரை அது. அதன் பார்வையில் வண்டும் பட்டது! நண்டும் பட்டது! அவ்வளவு தான்! என்ன வியப்பு! வலிய நண்டு கனியை விட்டு விட்டுத் தன் வளைக்குள் ஓடி ஒளிந்தது; வண்டும் பறந்து போய்விட்டது. போரும் ஒழிந்தது; புலம்பலும் அகன்றது!

போரிலா உலகம் உண்டோ? எங்கும் எந்நாளும் போர் நிகழ்ந்து கொண்டே உள்ளது. போரை ஒழிக்கவும் போரிடவே வேண்டியுள்ளது. போர் எவ்வகையால் எக்கரணியத்தால் நிகழ்ந்ததால் என்ன? விளைவு அழிவு அழிவு அழிவே! அழிவிலாப் போரை நாரை வழியே படைத்துக் காட்ட விரும்பினார் அம்மூவனார். அவர் தீட்டிய பாட்டோவியம் நற்றிணையில் மின்னுகின்றது (35)

பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்