உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பல்கால் அலவன் கொண்ட கோட் கூர்ந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

இரைதேர் நாரை எய்தி விடுக்கும்”

என்பது அது.

ஆண்குரங்கு கடுவன்: பெண் குரங்கு மந்தி: கடுவன் ஒருநாள் மந்தியைக் கண்டது: அதன் அழகில் மயங்கியது: இயலிலும் செயலிலும் வயமிழந்தது, மந்தியும் அவ்வாறே கடுவன் மேல் மையல் கொண்டது. தீராக் காதலராகத் திகழ்ந்தனர் கடுவனாரும், மந்தியாரும்.

கூட்டத்தின் இடையே கடுவனும் மந்தியும் இருந்தன: தனித்த காதல் இனித்தது: இரண்டும் நயமாக நழுவின!செறி மரக்காடும் நிறை கொடிப் பந்தரும் மல்கிய குறிஞ்சியில் தானா கூடுமிடப் பஞ்சம்?

ஓங்கிய அடுக்கம் அதன்மேல் ஓங்கிய மரக் கூட்டம்: மரம் மறையப் போர்த்த மிளகுக் கொடிப்புதை; இவ்வியற்கைக் குடியிருப்புக்குள்ளே கனவுக் காதலில் கலந்தன கடுவனும்

மந்தியும்.

கடுவன் தழுவிய தழுவலில், மந்தியின் உச்சி மயிர் கலைந்து உலைந்து போய்விட்டது; தங்கள் மறைவொழுக்கத்தைக் காட்டிக்கொடுத்துவிடுமே கலைந்த தலை! இருட்பந்தலுக்குள் போகும் போது வாராத திகைப்பு. வெளிச்சத்திற்கு வரும் போது - கூட்டத்தை நினைக்கும் போது தோன்றியது. இயல்பாகவே சிவந்த மந்தியின் முகம் நாணத்தால் மேலும் சிவந்தது! கூனுடல் மந்தி தன் மனக்குலைவால், மேலும் குறுகித் தாழ்ந்தது! தலை நிமிர்ந்து கூட்டத்தோடு சேர வேண்டுமானால், தலையின் குலைவைச் சரி செய்ய வேண்டும் எனத் தெளிந்தது.

அறிவு நலங்கனிந்த அந்த மந்தியின் கண்ணில் அழகிய வேங்கை ஒன்று நின்றது. அது கொல்லும் கொடுவாய் வேங்கை அன்று: வெல்லும் கோடுவாய் வேங்கை. அதன் ஓரம் ஒரு நீர் நிலை, தாழ்கிளையில் ஏறித் தலை தாழ்ந்து நீர்ப்பளிங்கிலே பார்த்து தலை வகிட்டைச் சரி செய்தது. 'அப்பா! கவலை விட்டது' என்று கிளையோடு சேர மரக்கிளை விட்டு நடையிட்டது மந்தி!