உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

167

க்

ஒரு தலைவியைக் கண்டு காதல் கொண்ட தலைவன். அவளை அடைவதற்கு அவள் தோழியின் துணையை நாடுகிறான். அவள், இவர்கள் காதலைக் குறிப்பாக அறிந்து கொண்டவளே ஆயினும் அறியாதவள் போலவே நடந்து கொள்கிறாள். தலைவன் அடுத்தும் தொடுத்தும் பன்முறை வேண்டி கொண்டும், அதனைத் தட்டிக் கழிக்கவே தோழி முயல்கிறாள். தலைவன் தகுதியானவன் என்றும். ‘அவன், இவளை இல்லாமல் வாழான்' என்றும் 'இவள் அவனை இல்லாமல் வாழாள் என்றும் தெளிவாக அறிந்து உறுதிப் படுத்திக்கொண் பின்னரே அவர்கள் காதலுக்குத் துணையாகிறாள். தோழியின் நினைவு, செயல் சொல் எல்லாம் அவர்கள் களவுக் காதல், கற்பு மணமாகித் திகழவேண்டும் என்பதேயாம். இதற்காக அவள் எடுத்துக் கொள்ளும் நன்முயற்சிகள் பொன்னிற் பதித்த மணியெனப் போற்றத் தக்கனவாம்.

தலைவனும் தலைவியும் உணர்ச்சி வழியில் செல்பவர்கள். அவர்களை அறிவுத் திறந்தால் இயக்கி அறவாழ்வில் நிலை பெறுத்தும் அருமைப் பொறுப்பாளியாகவிளங்குபவள் தோழியே! ஆதலால் அவள் அன்னை போல் அரவணைப்பாள்: தந்தைபோல் கண்டிப்பாள்: ஆசான் போல் இடித்துரைப்ாள்; தோழியாய்த் துணை நிற்பாள்: இ இவை யெல்லாம் அவளுக்குக் கைவந்த திறங்கள்: நாவீறு படைத்த நங்கை அவள்: சொல்லாற்றல் மிக்க சுடர்ப் படைப்பு தோழி!

தலைவன் தலைவியைக் காணுதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருபவள் தோழியே. அவள், தலைவளைப் பகலில் வரச் சொல்வாள்: பிறிதொரு நாள், இரவில் வரச் சொல்வாள்: பின்னொருநாள், 'பகலிலும்வரவேண்டா:இரவிலும்வரவேண்டா’ என்பாள், இரவுப் பொழுதில் காட்டு வழியே வருவதால் உண்டாகும் இடையூறுகளையெல்லாம் விரித்துரைப்பாள்: பகலில் வருவதால் உண்டாகும் பழிகளை யெல்லாம் எடுத்துரைப்பாள். தலைவன் காணாமல், தலைவியை மறைத்து வைப்பாள். அவள் நோக்கமெல்லாம் தலைவன் தலைவியர் அன்பைப் பெருக்கி ஆக்கப் படுத்த வேண்டும் என்பதேயாம்.

ஒரு மலையடிவாரம்: தினைக்கொல்லை: தினைக் காவலுக்குத் தலைவியும் தோழியும் செல்கின்றனர். சல்கின்றனர். அங்கே