உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

66

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ஊண்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே! தான் படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.’

வான் கலந்த மாணிக் வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன் கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே'.

இப்பாடல்களை நோக்குக. தம்மை மறந்து தாமே நூலாகி ஊனும், உளமும் உயிரும், உயிருக்கு உயிரும் ஒன்றியும், கலந்தும் பாடிப் பெற்ற ஒருமைப்பாட்டுக் கல்வியை அறிவோர் வள்ளலார் பெற்ற ஓதாக் கல்வியைத்தெளிவர் அல்லரோ!