உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

179

கொளலாகும்' என்றாரே வள்ளுவர். அவ்வோத்து, ஓதப்படும் மறையேயன்றோ! இடைவிடாது பயிலும் பயிற்சியுடைய மற்போர் வீரர்க்குப்‘பயில்வான்' என்னும் பெயருண்மை நோக்கியும் 'ஓதுவார்' பெயர்ப் பொருளைத் தெளியலாமே!

ஓதுவது ஒழியேல்' 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா; 'நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்' என்பவை நாம் அறியாதவையோ? ‘பாம்பு ஏறினும்-படைஏறினும்-ஏடது கை விடேல்' என்பதும் புதுவதோ? பொது அறிவினார்க்குப் பல்கால் ஓதி அழுந்தப் பதித்து வைத்தால் தான் பதிவாகி நிற்கும்! ஆனால் கருவிலே திருவுடையார்க்கு ஒருகால் கேட்ட-படித்த அளவானே அழுந்தப் பதிவாகி விடும். அவர்கள் பொது மக்களெனப் பல்கால் வருந்திப் பயில வேண்டுவதில்லையாம். ஆகலின், அவர்கள் கற்ற கல்வி ‘ஓதாக் கல்வி' என்னும் ஒரு பெருஞ் சிறப்புக்குரிய தாயிற்றாம்.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் ஒரு பாடலை ஒருமுறை கேட்ட அளவானே ஒப்பித்ததை வரலாறு கூறுகின்றது ‘ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன்' எனத் தம் வரலாற்றை அந்தகக்கவி வீரராகவர் குறிப்பிடு கின்றார். 'வெண்பா இருகாலில் எல்லானை வெள்ளோலை. கண்பார்க்க கையால் எழுதானைப் பெண்பாவி பெற்றாளே பெற்றாளே பிறர் நகைக்கப் பெற்றாளே” என்று ஔவையார் தனிப்பாடல் எள்ளி நகையாடுகிறது. இக்காலத்தும் மதுரையில் திகழும் பண்ணிசை வல்லார் திருப்பதியார் ஒரு பாடலை இருமுறை கேட்ட அளவானே அருமையாக இசையுடன் பாடுதலை நேரிடையில் ஆய்ந்து கண்டுள்ளோம்! திருக்குறள் எண்கவனர் கோயில்பட்டி இராமையனார் நினைவாற்றல் திறம் சொல்வார் சொல்லிறந்து செல்லும் தகைத்தாய்த் திகழ்கின்றது. வையெல்லாம், நெஞ்சில் குத்தி உருப்போட்டு வரப்படுத்திக் கொள்வனவாய் அமைவன வல்ல! வள்ளலார் திறம், ஒருமுறை படித்தாலே-கேட்டாலே - பச்சை மரத்தில் பதியும் ஆணியெனப் பதிந்ததாகலின் அக்கல்வி ஓதாக்கல்வி எனப் பெற்றதாய். இன்னும் தெளிவு வேண்டுமோ?

66

“ தேன்படிக்கும் அமுதாம் நின் திருப்பாட்டைக் தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன்: நாவொன்றோ