உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தாயுமானவர், பட்டினத்தார், சேக்கிழார், திருமூலர் இன்னோர் திருப்பாடல் குறிப்புகள், செய்திகள், வரலாற்றடைவுகள், திருக்கோயில் வைப்புகள், அடியார் அருள் விளக்கங்கள் இன்னவற்றையெல்லாம் ஓரோட்டமாய்க் கற்பாரும், செம்பொருட்பேரேட்டு நூல்களிலே வள்ளலார் தோய்விலர் எனத் துணிவரோ?

அன்பர்களுக்கு விடுத்த முடங்கல்களிலேயுள்ள மருத்துவக் குறிப்புகளைக் காண்பார், வள்ளலார் சித்த மருத்துவ நூல்களிலே நுழைபுலம் இல்லார் எனச் சொல்வரோ?

மதுரைத் திருஞானசம்பந்தர் திருமடத்தடிகளார்க்கு விடுத்த முடங்கலையும் தமிழ் என்னும் சொல் குறித்த விளக்கவுரையையும் கற்போர் வள்ளல் பெருமகனார் வளமான இலக்கணத் தேர்ச்சியில் ஐயுறவும் கொள்வரோ?

எத்துணைய ாப்பு வகைகளையும் வண்ண வகைகளையும் வள்ளலார் வளப்படுத்தியுள்ளார்! எத்துணை அகத்துறைகளை வனப்புறுத்தியுள்ளார்! பிற்கால இசை வகைகளில் எத்துணை ஏற்றங் காண்பித்துள்ளார்! இவை யெல்லாம் ஏடெடுத்துப் படியாமல் வந்தனவோ?

L

ஏடறியேன் எழுத்தறியேன்! பாடறியேன் படிப்பறியேன்; என்பது போலக் கற்றறியாத 'மெட்டுப் பாவலர் அவரல்லர். அவர் கற்றறிந்த கல்விச் சால்பினரே. ஆனால் அவர் கற்ற கல்வி, ஓதி்’க் கற்ற கல்வியன்று. ‘ஓதாது’ கற்ற கல்வியேயாம்.

சொல்லாய்வு ஒன்றே சொற்பொருள் விளக்கத்தைத் தெள்ளிதில் காட்டவல்லது. ஓதுதல், ஓதாமை என்பவை

எவை?

கடலுக்கும் கடல் அலைக்கும் ‘ஓதம்’ என்பது ஒரு பெயர். அப்பெயர் வந்தது எதனால்? இடைவிடாது ஒலித்துக் கொண்டிருத்தலால் ‘ஓதம்' என்னும் பெயரை அவை பெற்றன. ஓதம் என்பது ஓதையாய், ஒசையாய் ஒலி ஒலிப்பொருளும் தருவதாயிற்று.

இடையீடில்லாது தெய்வத்திருக்கோயிலில் பண்ணிசைத்துப் பாடுபவர் எவர்? அவர் ஓதுவார் அல்லரோ? ‘ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது' இறைபுகழேயன்றோ! ஆதலின் அவற்றை

சைப்பார் ஓதுவார் ஆயினர். 'மறப்பினும் ஓத்துக்