உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பிரித்து வைக்கும் மாறுபாடுகள் இல்லை. நாமெல்லாம் மாந்தர் எனப்படும் ஒரே ஒரு குலத்தைச் சேர்ந்தவரே; அதுபோல் நம் கடவுளின் பெயர்களும் சடங்கு முறைகளும் நூல்களும் வேறு வேறாக இருக்கக் கூடும். எனினும், அவை யெல்லாம் மாறு பாடானவை அல்ல; ஒரே கடவுளைப் பற்றிக் கூறுவனவே எனத் தெளிவாக்குகிறார். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும்

ம்முழக்கமே விரிநீர் வியனுலகத்து மக்களை யெல்லாம் ஒருகுடிப் பிறந்த மக்களாகக் கருதி மதிக்கின்ற பேற்றைத் தருவதாம்.

சமயங்கள் பல பெயர்களோடு இருத்தலைப் பற்றியும் திருமூலர் கருதுகிறார்; ஒரு பெரிய ஊர் இருக்கிறது: அவ்வூர்க்குச் செல்லும் வழியென்ன ஒன்றா இரண்டா? திசைதோறும் வழிகள் இருக்கத்தானே செய்கின்றன. அவ்வழிகளில் அவரவர்க்கு வாய்ப்பான பழக்கமான வழிகளில் வருகின்றனர். எவ்வழியில் வந்தாலும் அப்பெரிய ஊர்க்கு வருவதுதானே அவர்கள் நோக்கம். அவ்ழிகளில் இது உயர்ந்த வழி, இது தாழ்ந்த வழி, இது நல்ல வழி, இது அல்ல வழி என்று சொல்லுவானேன் என உலகச் சமய ஒருமைப்பாட்டை விளக்கிக் கூறுகிறார் திருமூலர்: எல்லாச் சமயத்தினரும் ஏற்றுப் போற்ற வேண்டிய செய்தி ஈதாகும்.

66

ஒன்றது பேரூர் வழி அதற்கு ஆறுள" என்கிறார்.

உலகம் உய்வதற்கு வழி காட்டிய திருமூலர், தனித்தனி மாந்தரும் உய்வதற்கு நன்னெறி காட்டியுள்ளார்.

ஒவ்வொரு இடத்திற்கும் நடந்து போய் வருவதற்கு நெறி இருக்கிறது.நெறியை அடுத்தே நெருஞ்சில் முள்ளும் கிடக்கிறது. நெருஞ்சில் முள் குத்தாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? நெறிப்படியே செல்ல வேண்டும் என்ப தானே முறைமை, அதனைப் போற்றிக் கொள்வது தானே கட்டாயமாகச் செய்ய வேண்டியது என்கிறார்.

நெறியைப் படைத்தான் நெருஞ்சிலும் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்

நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு

நெறியில் நெருஞ்சில்முட் பாயகிலாவே'

நினைப்பு சொல் செயல் எனப்படும் மூன்றும் ஒன்று பட்டிருக்கும் ஒரு நிலையே உயர் நிலை. இறைவன் விரும்பும் நிலை என்பதை,