உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்"

185

என்கிறார். இதனையே திருவள்ளுவர் “உள்ளத்தால் பொய்யா தொழுகல்” என்று கூறுவார்.

இறைவன் மேல் அன்பு செலுத்துதலோ, உயிர்களின் மேல் அருள் செலுத்துதலோ தம்மொத்த மக்களுக்கு உதவுதலோ முடியாதவையோ கடினமானவையோ இல்லை என்பதையும் திருமூலர் மிக அருமையாகச் சொல்கிறார்.

இறைவனை வழிபடுவதற்குத் தேரும் திருவிழாவும் மாலையும் தொங்கலும் புகையும் போற்றியும் செய்தால் தான் முடியும் என்பதா? செய்வார் செய்யட்டும். நீ ஒரு பச்சிலையை எடுத்து அவனை நெஞ்சார நினைந்து தூவினாலே போதுந்தானே என்கிறார்.

பெரிய பெரிய தொழுவங்களை உண்டாக்கிப் பசுக்களைக் காக்கும் அறத்தைச் செய்வார் செய்யட்டும்; நீ ஒரு கைப் பிடியளவு புல்லைப் பறித்துமா கொடுக்க முடியாது: அதுவும் உயிர்களைக் காக்கும் அறச் செயல் தானே என்கிறார்.

சத்திரம் சாவடி அறக்கட்டளை என்றெல்லாம் ஏற்படுத்தி நற்பேறு பெறுவார் பெறட்டும்; நீ பசித்தோர் முகம் பார்த்து, அவர்க்கு நீ உண்ணும் உணவில் ஒரு கைப்பிடியளவு தந்து உண்பதும் போதுமான கொடைச் செயல் தானே என்கிறார்.

இலையும் புல்லும் சோறும் எடுத்துத் தருவதற்குமா உனக்கு முடியாது? அவை முடியாது போயினும் வாயால் ஒரு நல்ல சொல்லுமா சொல்லுவதற்கு முடியாது? எவரெவரிடத்தும் இனிய சொற்களைச் சொல்லி உன் வாய்க்கு மணந்தந்து. அவர் செவிக்கும் மணம் தந்து இருபாலும் இன்பத்தை எளிமையாய்க் கொள்ளலாமே என்கிறார்.

அன்பு என்பது பண்பு மட்டுமன்று: அதுவே கடவுட் பண்பு: அதுவே கடவுள் என்று அழுத்தமாகக் கூறியவர் திருமூலர்.

66

அன்பும் சிவமும் இரண்டல்ல; ஒன்றே என்று கூறும் அவர் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே” என்கிறார். அதன் முதிர்ச்சியே “அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு