உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பேரும் பெருமையும்

பெயர் என்பது பேர் என்று மாறுதல் சொல் வழக்கு. இரண்டும் வடிவில் மாற்றம் பெற்றாலும், பொருள் ஒன்றனை ஒன்று தழுவியே நிற்கும். பெயரன், பேரன் எனப்படுவதும், பெயர்த்தி பேர்த்தி எனப்படுவதும், பெயர் பெற்றவர். பேர் பெற்றவர் எனப்படுவதும் வழக்கில் உள்ளவையே.

ஊர்ப் பெயர்களை ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு நூல் ஊரும் பேரும்' எனப்பட்டது. சொல்லின் செல்வர் இரா.பி.சேது அவர்கள் எழுதிய அருமையான நூல் அது.

ஊர் என்பதற்குத் தக்க எதுமையாய்ப் பேர் என்பது அமைந்தது என்பது இல்லை. ‘உயர்’ எனப்பட்டதே ஊர் ஆனதாம்.

எந்த இடத்தில்வீட்டைக்கட்டினாலும் நிலத்து மட்டத்திற்கு உயர்வாகக் கட்டுதலே என்றும் உள்ள வழக்கம். மலைப் பள்ளத் தாக்கில் அமைந்த அமைந்த ஊர் எனினும், அப்பள்ளத்தாக்கில் உயரமான இடமாகவே தேர்ந்து அமைப்பர். இல்லையானால் நீர் சூழ்ந்து ‘தீவு' ஆகிவிடுமே! 'உயர்' என்பது ‘ஊர்’ ஆனது, பெயர் என்து 'பேர்' ஆனது போன்றதே!

ஊர்ப் பெயரும் சரி, ஆள்களின் பெயரும் சரி, சிலர்க்கு மிக மிகப் பொருத்தமாக அமைந்து விடும். இயற்கையாக அமைந்த பெயர் எனினும் எதிர்காலச் சிறப்பெல்லாம் ஒருங்கே கொண்டது போன்ற பெருமையை உடையதாக அமைந்து விடும். அப்படிச் சீரும் சிறப்பும் உணர்த்தும் வகையில் பேரும் பெருமையும் கொண்டவர்களுள் குமர குருபரர் ஒருவர்.

குருபரர் என்றாலே இறைவருக்கும் குருவானவர் என்னும் பொருள் தரும். அதுவே முருகள் பெயர் என்பது காட்டும். னிக்‘குமரன் என்பதும் முருகன் பெயரே, ஆதலால் முருகனின்