உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ரட்டைப் பெயரும் ‘ஒற்றை ஒரு பெயராய் பருமைக்குரியது இப்பெயர்.

ணைந்த

‘குமரன்’ திரண்டவன்: குரு-ஒளியுடையவன்; பரன்- அப்பரம் பொருளாம்இறைவன் இம் முச் சொற்களும் தனிச் தமிழ்ச் சொற்களாய்த் தனிப் புகழ்ச் சொற்களாய்ப் - புணர்ந்து கலந்து ஒன்றாகி நின்ற பெருமையுடையன.

-

தொன்ம (புராண) முறைப்படி: திருமுருகன் திருத்தந்தை சிவபெருமான். அவன் திருக்கயிலை நாயகன். நம் குமர குருபரர் திருத்தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர். அவர் ஊர்ப் பெயர் தானும் 'கயிலாயப் பெயர்' கொண்ட திருப்பதியாகும். அது திரு வைகுண்டத்தின் வடபாற் பகுதியாகும்.

உமையம்மைக்கு ஒரு பெயர் சிவகாமி; சிவகாம சுந்தரி என்பதும் அது. குமர குருபரர் அன்னையார் பெயரும் அப்பெயரே.

சண்முக சிகாமணியாரும் சிவகாம சுந்தரியாரும் மகப் பேறு பெற்றும் மகிழ்வுப் பேறு இன்றிப் பிறந்த மகன் பேச வேண்டுமென்று திருமுருகன் படைவீடுகளுள் ஒன்றாகிய செந்திலில் பாடுகிடந்தனர்:

குருபரன் பேச வேண்டுமென்று

குருபரனிடமே

பாடுகிடந்தனர். பேசும் வாய் கேட்கக் கிட்டியதோ பாடும் வாய்! அவ்வாய் என்ன பாடியது? கந்தர் கவிவெண்பாப் பாடியது! சிவநெறிச் சீரெல்லாம் திரட்டிச் செந்தேனாய்க் “கொந்தவிழு மலர் வீசிக் குளிர் கெழுமுத்தெடுத்திறைத்து" என்றது போலவே கொழித்தது.

பேறுற்ற பெருமையைப் பாடினால் பிறந்த மண்ணின் பெருமையையும் பாடவேண்டுமே! 'கயிலைக் கவம்பகம்' பாடினார்! பிறந்த ஊர் ‘கயிலை' என்பதன்றோ!

பெரும் பெயர் இறைவனைப் பாடியவர் அப்பெரும் பெயர் இறைவியைப் பாடாது விடுவாரா? மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடிப் பிள்ளைத் தமிழ்களிலேயே கொள்ளைத் தமிழ் கொஞ்சுவது அது என்று நிலைப்படுத்தினார்.

குமரப் புலவர் குழந்தையர் கல்வியை மறக்கலாமா? மறப்பாரா? குழந்தையர் நன்னெறிக் கல்விக் கெனவே அவர் பாடியது நீதி நெறிவிளக்கம்!