உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

189

குருவர் ஒருவரைக் குமர குருபரர் தேடியலைந்தார். அக்குருவரைத் தரக் காத்திருந்தது தருமபுரம்! தருவது தானே தரு! தருவது தானே தருமம்!

பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் எனப் பயன் மிகு பழத் தரு தருவதை உரைத்தாரே திருவர் வள்ளுவர்! தருமபுரம் குருபரர்க்குக் குருவைத்தரக் காத்திருந்தது!

குருவர் இயல்பு என்ன? மனத்துக்கண் மாசு இலராய்க், கசடறக் கற்பிக்கும் திறவோராய், உள்ளொளி எழுப்பும் உரவோராய் இருத்தல் அன்றோ! அப்படி ஒரு குருமணி, தருமணி, தருமபுரமணி “மாசிலாமணி' குருபரர்க்குக் குருவானார்!

குருவரிடம் துறவு வேண்டி நின்ற குருபரர்க்குப் பேரம்பலப் பெரும் பொருளை விளக்குதற்குச் சிற்றம் பலத்தைக் காட்டினார். சிற்றம்பலம் கண்டு களித்த அவர் செய்யுட் பொருள் சிவமே என்பார் போல் சிதம்பரச் செய்யுட் கோவை பாடினார்;

சிற்றம்பலத்து அன்னை பெயரைப் பெற்ற அன்னை பெயர். தம்மைப் பெற்ற அன்னை பெயர் என்பது எவ்வளவு மகிழ்வு செய்திருக்கும்! சிதம்பர மும்மணிக் கோவையும் ஆங்கு இயற்றினார்.

ப்

தருமபுரத்தில் இருந்து தில்லைக்கு வரும் வழியில் இடை பட்டது புள்ளிருக்கு வேளூர். அதுவே இந்நாள் வைத்தீசுவரன் கோயில். ஆங்குக் குமரவேள் பெயர் முத்துக் குமரன். குமர குருபரர் முத்துக் குமரனை முத்து முத்துப் பாடல்களால் முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார்.

மெய்க்குருவர் மாசிலாமணியாரை வாளாவிடவாய்வருமா? அவர்மேல் பண்டார மும்மணிக் கோவை பாடிப்பரவினார். மணிக்கு ஏற்றது. மணிக் கோவை தானே!

ஒருவரை வயப்படுத்துவதற்கு அவர் மொழியில் பேசுவது போல வேறொன்று இல்லை. உருதுமொழி கற்றுச் சிறந்து அந்நாள் தில்லிப்பாதுசாவினிடம் உரையாடினார். அப்பயிற்சியில் சிறக்கக் கலைத் தலைவியாம் கலைமகளை வழிபட்டுச் சகலகலாவல்லி மாலை பாடினார். பாதுசா உதவியால் காசியில் இடம் பெற்றுக் குமாரசாமி மடம் கட்டினார். பெருமை விளங்கக் காசிக் கலம்பகம் பாடினார்.

காசியின்