உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம்

18

தாம் தடம் பதித்த மண்ணை யெல்லாம் தமிழ் மணங்கமழும் தண்மண்ணாக்கிய தவத்தோன்றல் குமரகுருபரர் அவர் பேரும் பெருமையும் தமிழொடு கலந்து ஒன்றி உடனாகி என்றும் திகழ்வதாகும். வாழிய கொஞ்சு தமிழ்க் குமர குருபரர் திருப்பெயர்!