உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. வாழிய வையகம்

“நாம் நன்றாக வாழ வேண்டும்” என்னும் எண்ணமுடைய எவர் வாயும் முழங்க வேண்டிய முழக்கம். “வாழிய வையகம்” என்பதாம்.

உலகம் நன்றாக வாழாமல் ஒருவர் நன்றாக வாழ முடியுமா? ஒரு நாள் வேண்டியது இல்லை: ஒரு நொடிப்பொழுது வாழ்வும் உண்மையை உணர்த்தி விடும்!

ஒரு பிடி சோறுதானா? பசிப்பிணி மருந்து: ஆருயிர் வளர்க்கும் அமிழ்து: இயக்கம் அருளும் இறை: உலகவர் கொடை!

அளவால் ஒரு பிடி சோறுதான்! அதற்கு உழைத்தவர் எவர்? எவர்? உழுதவர்-விதைத்தவர்-உரமிட்டவர்-களை எடுத்தவர்-நீர் விட்டவர்-அறுத்தவர்-அடித்தவர்-அவித்தவர்- அரைத்தவர்-ஆக்கியவர் இப்படி எத்தனை பேர்?

இத் தொழில்களைச் செய்வதற்குக் கருவிகள் எவை எவை? இடு பொருள்கள் எவை எவை? சோறாக்கும் கலங்கள் எவை டு எவை? இவற்றை உருவாக்கித் தந்த உழைப்பாளர் எவர் எவர்? எண்ண முடியுமா?

6

ங்களில்

ஒரு பிடி சோறுக்கும், குழம்பு கூட்டு சாறு தொடுகறி என எத்தனை பொருள்கள்? இவற்றை எத்தனை இட எத்தனை பேர்கள் உண்டாக்கி உலகுக்கு வழங்குகின்றனர்? கடுகு, மல்லி, சீரகம், பூண்டு மிளகு, உப்பு, பருப்பு, எண்ணெய், எரிபொருள் என எத்தனை பொருள்கள்: இவற்றை உலகம் பெற உதவியவர்கள் ஒருவரா? இருவரா?

அன்னை ஆக்கித் தந்தால், அவர் ஆக்குவதற்கு அன்னை அனையவர் எத்தனை பேர்கள் பங்களிப்புச் செய்துளர்? ஒரு பிடி சோற்றுக்குள் உலகம் இப்படி ஒன்றாகி நிற்கிறது என்றால் அவ்வுலகத்தை மறந்து அதன் கொடையை மறந்து-வாழ்ந்தால் அப்பிறவி வாழும் பிறவியாகுமா?