உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எந்நன்றியை மறப்பினும் செய்த நன்றியை மறத்தல் ஆகாதே! நன்றி மறத்தலைக் கொலைக் கொடுமைக்கு ஒப்பாக அல்லவா உயர்ந்தோர் கூறினார். அதனால் அல்லவோ, “எந் நன்றி கொன்றார்க்கும்" என்ற பொய்யா மொழியார், “செய்ந் நன்றி கொன்ற” என்றார்.

உலகத்தின் -நன்றியை மறந்தவர்-உயர்ந்த பிறவியர் ஆகார். அவர் வாழும் பிறவியர் அல்லர்; பாழும் பிறவியர்!

வாங்கிய கட னைச் செலுத்தாப் பிறவி, பிறவியா? அப்பிறவி கடமை மறந்த கடனாளிப் பிறவிதானே! அப்படிக் கடனாளிப் பிறப்பாக இருந்து கடனாளிப் பிறவியாகவா, உலகம் பழிக்க முடிவது பழிப்பிறவி தானே!

66

செய்து, என்

கடமையை

உலகம் செய்யும் உதவியை மறவாமல், தம்மால் இயலும் கடமையை முழுமையாகச் அரைகுறையாகச் செய்தேன் இல்லை முழுதுறு நிறைவாக என் கடமைகளை ஆற்றினேன்” என்னும் நிறை மன வாழ்வே உலகக் கொடை வாழ்வாம் அக் கொடை வாழ்வு பெருகட்டும் என்னும் பேருளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் உண்மை வாழ்த்தே வாழிய வையகம் என்பதாம்.

தெரு முழக்கம் இல்லை இது-தெய்வத்

திரு முழக்கம் இது.

உணர்ந்து ஓதும் இம் முழக்கம்,

உலகம் காக்கும் உயிர் முழக்கமாக--உணர்வு முழக்கமாகத் திகழ்வதாக!

வாழிய வையகம்.