உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

66

18 இளங்குமரனார் தமிழ்வளம்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை

என்றார். அதர் என்பது வழி; அதர் வினாய் - என்பது வழி கேட்டு என்னும் பொருளுடையதாகும்.

66

'ஊக்கம் இவ்வளவு உயர்ந்ததா?” ஊக்கம் இருந்தால் ஆக்கம் வந்து விடுமா? என்று வியப்போடு நினைக்கும் போதே, ஆம்! ஊக்கம் வேறு ஆக்கம் வேறா? ஊக்கமே ஆக்கம் தான் என்கிறார்.

நாம் கழுத்துக்கு அணிகலம் அணிவோம்! கையிற்கும் அணிவோம்! விரலுக்கும் அணிவோம். காலுக்கு காதுக்கு எனவும் அணிவோம். ஆனால் இவை தாம் அணிகலங்களா? இவற்றினும் சிறந்த அணிகலம் விலைமதிப்பற்ற அணிகலம், தமக்குள்ளாகவே இருக்கும் அணிகலம்; அணிகலங்களுக் கெல்லாம் அணிகலம் ஒன்று உண்டு; அது ஊக்கம் என்னும் அணிகலம். எவரையும் தூண்டி விட்டு அல்லல் ஆக்காத, அருமை அணிகலம் அது.

“உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை'

என்னும் அணிகலம் என்கிறார் திருவள்ளுவர்.

ஊக்கம் என்னும் அணிகலம் அணிந்தால் அழிவு ல்லையா? இல்லை! என்று சொல்கிறார் வள்ளுவர்.

வெள்ளம் பெருகி வருகிறது? மேலும் மேலும் பெருகி வருகிறது; புல்லைப் பறிக்கிறது; நெல்லை யழிக்கிறது; மரத்தை வீழ்த்துகிறது; வீட்டைச் சாய்க்கிறது; ஆனால், அந்த வெள்ளம், மலையை என்ன செய்துவிடும்? முட்டட்டும் - மோதட்டும் சுற்றிச் சுற்றி வளைக் கட்டும் - மலையை என்ன செய்துவிடும் அந்த வெள்ளம்?

மலைபோலும் ஊக்கமுடையவனைத் துன்புறுத்த வரும் எவையும் துன்பமுற்று ஓடுமே அல்லாமல், அவனைத் துன்புறுத்த மாட்டவே மாட்டா!

6

வெள்ளம், உள்ளத்தின் உயர்வுக்கும் உவமையாயிற்று!

-

அதே வெள்ளம், உறுதிப் பாட்டுக்கும் உவமையாயிற்றா?

வள்ளுவப் பார்வையில், அவ்வாறு ஆனமையால் தான்.