உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வாழ்வியல் வளம்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு”

என்றொரு குறட்பா அருளினார்!

வெள்ளத்தின்

அளவு, தாமரையின்

39

அளவு; உன்

உள்ளத்தின் அளவு, உன் உயர்வின் அளவு என்றார்

தாமரைக் கொடிக்கு உயரம் உள்ளே கிடந்ததா? வெளியே கிடந்தார்? உள்ளேயே கிடந்தது: வெளியே இருந்து வரவில்லை. வெளியே இருந்து வெள்ளம் வந்தது. உள்ளே இருந்த உயரம் எழுச்சி கொண்டது! அதுபோல், உள்ளத்தின் உள்ளேயே உயரமும் இருக்கத்தான் செய்கிறது! அது வெள்ளம் போன்ற உணர்வால் எழுப்பப்பட வேண்டும்! எழுந்து உயர்ந்து விடும்! எண்ணாத வெற்றியை எல்லாம், எண்ணித் தரத்தொடங்கிவிடும்! உரம் உண்ட ா உன்னிடம்? உன்னிடம் உயர்வும் உண்டு!" என்பது வெற்றிச் சூத்திரம்! தனை,

66

"உள்ளம்

-

ஊக்கம்

-

“உள்ளம் உடைமை உடைமை

என்கிறார் திருவள்ளுவர், அன்புடைமை, அருளுடை மை, அறிவுடைமை என உடைமைகளைக் கூறும் திருவள்ளுவர் தாம், உள்ளம் உடை மை உடை மை என்கிறார். உள்ளமுடைமை இல்லாவிட்டால், எந்த உடைமையும் பயன்படா என்பதை நன்கு அறிந்தே சொல்கிறார். அதனால்,

66

என்றார்.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று”

ஊக்கம் என்னும் உடைமை இல்லா விட்டால், மற்றை எந்த உடைமையும் உடைமையாகாது என்பதைத் தெளிவாக்கியது இது.

ஊக்கம் இருந்தால் உயர்வு வரும் என்பது மட்டும் தானா இல்லை, ஆக்கமும் தேடிவரும் என்கிறார்.

ஆக்கத்தை ஊக்க முடையவன் தேடிப் போக வேண்டியது இல்லை! ஆக்கமே ஊக்கமுடையவன் இருக்கும் இடத்தை அறிந்து, அவனை அடைவதற்கு உரிய வழியைத் தானே கேட்டுக் கொண்டு, தேடி வந்து சேருமாம், இதனையே,