உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கடிப்பாரா?" என்பார் அப்பரடிகள்! "குயில் ஒலி கேட்பதை விடுத்துக் கழுதைக் கத்தலை எவர் கேட்பார்” என்பார் தனிப்பாடலார்.

66

மலர்ந்த முகத்தானும் மதுர உரையானும்

நலந்தந் திடுவர்கள் நல்லோர் - புலந்திருந்த இன்னாமுகத்தான் அருளா திடும்பொருள் தன்னாற் பயனுண்டோ தான்”

என்று பாரத வெண்பாப் பகரும்.

ஈகையினும் சிறந்தது இன்சொல் என்பதை

66

அகமனர்ந்து ஈதலின் நன்றே முகமனர்ந்து இன்சொல னாகப் பெறின்

என்னும் இனியவை கூறற் குறள் நயம்பட உரைத்தல் நல்ல கொடையினும் சிறந்தது என்பதைக் காட்டும் அல்லவா!

நயம்பட உரை’த்தால் நாடெல்லாம் பாராட்டும்; நாளெல்லாம் பாராட்டும்! பன்னீர் தெளிப்பார் பன்னீர் தெளிக்கவும் படுவார் அல்லவா

தாமரைக் குளம் ஒன்று இருக்கிறது. இதனை, ஒருநாள் மாலைப் பொழுதில் பார்க்கிறோம். அப்பொழுது அதில் தண்ணீர்க்கு மேலே, அழகு முகம் காட்டிக் கொண்டு இருக்கிறது, தாமரை மலர், அன்று இரவு நல்ல மழை அடைமழை; காட்டுப் பகுதி நீரெல்லாம் வெள்ளமாகப் பெருகித் தாமரைக் குளத்தை நிறைத்தது கொஞ்சமா? எட்டடி உயரத்திற்கு, நீர்மட்டம் ஏறிவிட்டது ஐந்தடித் தண்ணீர் வந்தது, ஒரு நாள் மழையில் - ஓர் ரவில்! ஆனால் வியப்பு! வியப்பிலும் வியப்பு! அந்தத் தாமரைப் பூக்கள், அந்த எட்டடி நீருக்கும் மேலே ஏறிக் கிடந்து, எழில் முகம் காட்டுகின்றனவே!

6

டி

-

மூன்றடி உயரத் தாமரை எட்டடி உயரமாய் டி உயரமாய் எப்படி வளர்ந்தது? உள்ளே சுருண்டு கிடந்த கொடி, வெள்ளம் உயர உயரத் தானும் உயர்ந்த, வெள்ளத்திற்கு மேலே நிமிர்ந்து விட்டது! இந்த மெய்ம்மைக் காட்சியைப் பொய்யில் புலவர் திருவள்ளுவரும் கண்டார்! வியப்புக் கொண்ட அளவில் நின்றார் அல்லர்; வெற்றியின் அடித் தளம் ஈதெனத் தெளிந்தார். அடித்தளம் அதனால்,