உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

37

அன்று அது. சொல்லும் சொல் வெல்லும் சொல் என்னும் சிறப்புக்குரியதாம்.

“நவில்தொறும் நூல் நயம்” உண்டாம் என்றார் திருவள்ளுவர் உணவோடு கலந்துண்ணும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படும். அதற்கு நயம் எண்ணெய் என்பது பொது மக்கள் வழக்கு. நயன், நயன்மை என்பவை நேர்மையானவை. நீதி என்பதை நயன்மை என்று சொல்வது மொழிவல்லார் நெறி. நாகரிகத்தைப் போற்றும் திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் என்பார். நுண்ணிய கலைமலிந்த இசைப் பாடலை நயந்தெரி பாடல் என்பார் இளங்கோவடிகள். நலம் பாராட்டுதலை 'நயப்புரை' என்பது இலக்கிய வழக்கு. ஆதலால் நன்மையாவது. நேர்மையாவது இன்பமாவது ஆகியவை ‘நயம்' எனப் பட்டமை புலனாம். அவையெல்லாம் உண்டாகச் சொல்லாடு என்பதைச் சுருக்கியே பாட்டியார் 'நயம்பட உரை' என்றார்.

சொல்பவர் நாவுக்கு நன்மணமாக்குவது நயம்பட உரைத்தல். கேட்பவர் செவிக்கு நன்மணமாக்குவதும் நயம் பட உரைத்தல், தனக்கு நயவுரை விரும்புபவன் பிறர்க்கு நயவுரை தருதல் முறைமை அல்லவா என்பதைச் சுட்டிக் காட்டுவது நயம்பட உரை என்னும் சொல்லாணையாம் நல்லாணை.

நயம் தேன் மட்டுமா சுவை. சொல்பவரும் கேட்பவரும் 'நயம்தேன் என்று சொல்லிப் பாராட்ட உரைக்கலாமே! அவரும் நயந்து நயந்தேனை நாளெல்லாம் நாடெல்லாம் பரப்ப வழிகாட்டலாமே!

படித்தாலும் பக்கம் நின்று கேட்டாலும் தித்திக்கும் தெள்ளமுதம் என்றாரே வள்ளலார் பெருமான்! உரைத்தாலும் உரைக்க நின்று கேட்டாலும் உள்ளெலாம் அள்ளூற நயம்பட உரைக்கலாமே! தாம் பெற்ற இன்பம் உலகமும் பெற வேண்டும் என்னும் உயர்வின் வெளிப்பாடு ஆகுமே அது.

இனியவை கூறல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று. இரக்கம் கலந்தது; குற்றம் இல்லாதது! மெய்ப் பொருள் கண்டவர் வாயில் இருந்து வருவது - இன்சொல் என அதன் இலக்கணம் கூறினார். இன்சொற்கள் நம்மிடம் நிரம்பிக் கிடக்கவும் அவற்றை விடுத்து வன்சொற்களைத் தேடிக் கண்டு சொல்கிறார்களே இவர்கள் செயல் ‘கனியிருப்பக் காய் கவர்வது' அல்லவா என்கிறார். "கரும்பு இருக்க இரும்பு