உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எவன் பழிச் சொற்களைப் பரப்பித் திரிகின்றானோ அவன் பழிச் செயல்களையெல்லாம் ஒன்று ஒன்றாகக் கண்டு கணக்கிட்டு எல்லாவற்றையும் ஒரு மொத்தமாகத் திரட்டிக் கூட்டிப் பிறரால் பழிக்கப் படுவானாம். இதனை,

L

66

பிறன்பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும்’

என்பார். பழிப்பவனின் பழிச் செயல்களில் மிகப் பெரிய பழிகளைத் தேடித்தேடிச் சொல்வராம். அவ்வாறானால தன் பழியைப் பலப்பலரும் பரப்பத் தான் கேட்டுக் கேட்டு கேவலப்படவிரும்புபவன் எவனோ அவன் பழிப்பன பகரட்டும்; பிறர் “பழிப்பன பகர்தல் ஆகாது” என்று கூறுவதாய் அமையும்

மலைமுன் நின்று வாழ்த்தினால் எதிரொலியும் வாழ்த்தாகவே இருக்கும். இம்மலைமுன் நின்று பழித்தால் அதன் எதிரொலியும் பழிப்புரையாகவே இருக்கும். மக்கள் சொல்லும் சொல்லும் நம் சொல்லுக்கு எதிரொலியே என உணர்ந்து கொண்டால் “பழிப்பன பகர” வாய் வராது!“புகழ்வன புகல” ஆர்வம் கிளரும்

ஒருவர் சொல்லும் சொல்லைக் கேட்ட அளவில் அதனை மேலும் கேட்க ஆர்வம் உண்டாகின்றது. அச் சொல்லை மீண்டும் நினைக்கத் தூண்டுகிறது. அச் சொல்லை நினைக்கும் போதெல்லாம் இன்பமும் கிளர்ச்சியும் உண்டாகின்றன. காலம் கடந்தாலும் இடம் கடந்து சென்றாலும் வாழும் சொல்லாக நம்மிடம் நிலை பெறுகின்றது. நம் தொடர்புடையவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் மகிழ்வும் நலமும் ஆக்க ஏவுகின்றது.

சொல்லுக்கு இவ்வளவு ஆற்றலா? என நாம் வியக்கிறோம். சிலர்க்கு வாய்த்த அவ்வாற்றலை நினைத்துப் பூரிப்படைகிறோம். இவரைப் போல இவர் சொல்லும் இச்சொல்லைப் போல நாமும் சொல்லலாமே-அதற்கு முயலலாமே - என்னும் ஊக்கம் உண்டாகின்றது. இத்தகு நிலையை நோக்கியே உரைக்கும் உரையை “நயம்பட உரை” என்றார் ஒளவையார்.

ஆத்திசூடி இளையவர் இலக்கியம்; வளர்ந்தவர்கள் இலக்கியம்; வளர்ப்பவர்கள் இலக்கியம். இளமை தொட்டுப் பருமுது நிலையர் வரை பேணிக் கொள்ள வேண்டிய பெருமைமிக்க அற இலக்கியம். பாட்டியார் கண்ட பட்டறிவு இலக்கியம் அது. ஏனோ தானோவென்று சொல்லிய சொல்