உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

35

என்பார். ஏன்? வசை மொழி என வெளிப்படத் தெரிந்தாலும் அதன் ஆழப் பொருள் பெரிதாம். வகைச் சொல் அழியவே அழியாது. கொல்லும் சொல் என்பது வசைச் சொல்லே. அதனால் அச் சொல்லைக் கேட்டார் எவரும், அச்சொல்லைச் சொன்னார் எவரையும் மறந்து விடமாட்டார். தம் நெஞ்சத்திலே எட்டிக்காயின் கசப்புப் போலவும் ஈட்டிகுத்திய குத்துப் போலவும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பர். அச் சொல்லைக் கூறினார் வலியராயின் அவரைத் தாக்கியழிக்க முடியாதென உள்ளம் வெதும்பி வெதும்பி உருக்குலைந்து உரிய பொழுதைத் தேடிக்கொண்டு இருப்பர். ஆயினும் நெஞ்சில் அவர் சொல்லிய பழிச் சொல்லை வைத்துக் கொண்டே இருப்பர். ஆனால் பழிச்சொல் சொல்லியவர்க்கு ஒப்பாகவோ உயர்வாகவோ இருப்பவர் உடனே அவரைத் தாக்கவும் பழிக்கவும் ஆவர். விளைவு கொடிய விளைவாகவே இருக்கும் குடும்பத்தை அழிக்கும் கொடுமையாகவும் ஆகிவிடும். சொல்லும் சொல் கொல்லும் சொல்லாகவோ இருக்க வேண்டும்.

பழிச்சொல் சொல்வது வஞ்சச் செயல் என்று திரிகடுகம்

சொல்லும்;

வாயின் அடங்குதல் துப்புரவாம்; மாசற்ற செய்கை அடங்குதல் திப்பியமாம்-பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும்; இம்மூன்றும் வஞ்சத்தற் றீர்ந்த பொருள்.

என்பது அது.

ஓர் அறநெறிக் களஞ்சியமாகத் திகழ்வது திருமறை எனப்படும் ‘பைபிள்'. அதில் ஓர் அரிய நீதி “உன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை எடுத்துவிட்டு, அயலான் கண்ணில் இருக்கும் துரும்பை எடு” என்பது. இதனைத் திருக்குறள் “தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என் குற்றம்” என்று கூறும்.

தன் குற்றத்தை அறிவான் பிறர் குற்றத்தைப் பழித்துப் பேசுவனா? பேசினால் என்ன ஆகும். மனச் சான்று இல்லாதவன் என்பது உறுதியாகும்.

அவ்வளவோடு நிற்குமா? நில்லாது என்கிறார் அறநெறி கண்ட அண்ணல் திருவள்ளுவர்.