உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம்

18

செய்வது. அச்சொல்லறமாம் நல்லற உரைகளுள் ஒன்று “பழிப்பன பகரேல்” என்பது.

“பல்லக்கு ஏறுவதும் சொல்லாலே, பல் உடைபடுவதும் சொல்லாலே” என்பது பழமொழி. பெருமையும் சிறுமையும் சொல்லும் சொல்லால் உண்டாகும் என்பதைச் சொல்லும் பழமொழி இது.

66

'நுணலும் தன் வாயால் கெடும்” என்பதும் ஒரு பழமொழியே. நுணல் என்பது மணல் தவளை, அதன் வாயொலியால் பாம்புக்கு இரையாகி விடுவதைச் சொல்லுவது அது. ஆனால் தவளை மட்டுமா? ஆறறிவு படைத்தும், அடாவடித்தனம் எதுவும் செய்யாதும் வாய்ச் சொல்லால் இழிவும் பழியும் அடைவார் லரா? வாயால் கெட்டான்; வாய்ச்சனியன் என்றெல்லாம் சொல்லக் கேட்பதில்லையா? ஆதலால்தான்.

66

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்கிறார் திருவள்ளுவர்.

66

ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும் காக்கப் படுவன இந்திரிய மைந்தினும்

நாக்கல்ல தில்லை நனிபேனு மாறே”

என்று வளையாபதி பாடிற்று.

ஐம் பொறிகளிலும் நாக்கைக் காத்தலே முதன்மையானது என்பானேன், தீயால் சுட்டு வெளியேயும் உள்ளேயும் புண் ஆறிப் போகும். ஆனால் காலமெல்லாம் ஆறாப்புண் தழும்பு படாமலே தழும்பாகிப் போன புண், நாவு சுட்ட சொற்புண்! அதனால்,

66

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு”

என்றார் பெருநாவலர்.

பழிப்பன என்பது சான்றோர் பழித்துக் கூறியனவாம்.

'வசைச் சொல் ஆகாது' என்பது வையகம் சொல்வது. ஆசிரியர் தொல்காப்பியர் வசைச் சொல்லை ‘வைஇய மொழி'