உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

33

ஒரு மரம்! பெரிய மரம்! ஆலமரம்! அம்மரத்தின் பழைமை காட்டுவதுபோல் அதனைத் தொன்மரம், முதுமரம் என்றனர், மூதாலம் என்றும் கூறினர் அம்மூதால மரத்தின் வேரைக்கறையான் அரித்துவிட்டது! வேரில் இருந்து அடிமரத்தையும் தின்று விட்டது! ஆயினும், மரம் வீழ்ந்துவிடவில்லை! சிதைந்து விடவும் ல்லை! மரம் மரமாகவே நின்றது! வழக்கம் போல் அடி நிழலில் தங்குவார் தங்கினர்! படுப்பன படுத்தன! கிளையில் இருந்த பறவைகளும் வழக்கம்போலவே தங்கின! இதனைக் கருதிக் கருதிக் களிப்புற்றார் ஒருவர். பாவலராகிய அவர் ஓர் அரிய காட்சியை அமைத்து விளக்கினார்!

66

‘குடும்பத்தைக் காக்கும் தந்தை முதிர்ந்துவிட்டார்! தளர்ந்தும் போனார்! குடும்பத்தைக் கட்டிக் காக்கும் கடமையைச் செய்ய

யலாதவராய்

ஒடுங்கி விட்டார்! அந்நிலையில்,

அக்குடும்பத்தை அவரின் மக்கள் காப்பது போல், அடிமரம் சிதைந்தாலும் இவ்வீழ்துகள் முழுமரத்தையும் தாங்கிக் காக்கின்றன!" என்று பூரிப்படைந்தார்!

66

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்

குதலைமை தந்தைகண் தோன்றில், தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்’

99

என்பது அப்பாட்டு; நாலடியாரில் உள்ளது!

மலையே நிலைசாய்ந்தது போலத் தலைவர்கள் சாய்ந்து விட்ட எத்தனை குடும்பங்களை நிலைப்படுத்திய நன்மக்கள் நாம் காண கேட்க - உள்ளனர்! அவர்கள் கிளை தாங்கும் வீழ்துகள் போல், குடி தாங்கும் தூண்கள்!

இறைமைக்கொடை!

வேரும் வீழ்தும் இயற்கைக் கொடை! இறைமைக் கொடை! இயற்கையன்னையின் இரு கைகளைப் போல, இருபால் இருந்தும் ஊட்டுகின்றன; உதவுகின்றன! கடமைகளைக் காலம் காலமாகப் புரிந்து வருகின்றன! இயற்கை அருளிய இரட்டைக் கைகளை யுடைய நமக்கு இவ்வேரும் வீழ்தும் “எங்களைப் பார்த்து இசைபட வாழுங்கள்” என்று சொல்கின்றன அல்லவா!

எல்லா அறங்களிலும் சிறந்தது சொல்லறம். அது, செலவற்றது; செம்மையானது; சிறப்புத் தருவது; சீர்மை