உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம்

- 18

66

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்"

என்றும் கூறினார்.

பாரதியார் பாடுகிறார்

நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வைய முழுதும் பயனுறப் பாட்டி லேயறங் காட்டெனும் ஒர் தெய்வம்; பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி யெங்கும் உவகை பெருகிட

ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறென்றே!

தெய்வங்களே ஓடி ஓடி வந்து, பாடு பாடு என்று தூண்டு கின்றன என்கிறாரே, பாரதியார். நமக்கென்ன கூடாததா அது? நாமும் சிக்கெனப் பற்றிக் கொண்டால், அத்திறம் நம் கைக்குள் சிக்காமல் போகாது. இதோ பாவேந்தர் பாடுகிறார்:

66

66

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்

கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்

சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்

தொட்ட இடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்;

மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற

மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ் சாலையிலே, கிளைதோறும் கிளியின் கூட்டந்

தனில், அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்”

'சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாய்

திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நா ரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளையில்

நாடகத்தைச் செய்கின்றாள்; அடட! செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்

புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்

நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.”