உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

43

காணும் காட்சியெல்லாம் நெஞ்சத்தில் குடியேறி விட்டால்

அதனை வெளிப்படுத்துவது தானா அருமை? எந்த வடிவத்திலேயும் அது அவரவர் ஆர்வத்திற்கும் பயிற்சிக்கும் தக்கவாறு வெளிப்படுமே!

'டூமாசு' என்பவர் ஓவியர், அவர் ஒர் ஆட்டை ஓவியமாகத் தீட்டினார். அதனைப் பார்த்த சுவைஞர் ஒருவர். "டூமாசு ஆட்டை வரையவில்லை; ஆடாகவே மாறிவிட்டார்” என்றார்!

எதைக் காணுகின்றாரோ அதுவாக மாறிவிடுதல் என்பது, அருமையான திறம்! அத்திறம் வல்லவர் படைப்புகள் சுவைஞர் களையும் படைப்பாளி நிலைமைக்கே உயர்த்திவிடும்.

L

அதே டூமாசு வரைந்த புறாவின் ஒவியம் ஒன்றைப் பார்த்த சுவைஞர் ஒருவர், “நான் டூமாசு வரைந்த புறாவைப் பார்த்ததும் புறாவாகவே மாறிவிட்டேன்;கூழாங்கற்களைப்பொறுக்கித்தின்ன வேண்டும் என்று ஆர்வம் உண்டாயிற்று” என்கிறார்.

இராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. வாலிபன் ஒருவன் மந்தரை வேடமிட்டு நடித்தான், மந்தரையின் நடிப்பும் சூழ்ச்சித் திறமும் பார்வையாளருள் இருந்த ஒருவரை அப்படியே வயப்படுத்தி விட்டது. உண்மை நிகழ்ச்சியே போலவும், தம் கண் முன் நிற்பவள் மந்தரையே என்பது போலவும், உணர்ந்த அவர் செருப்பைக் கழற்றி அவன்மேல் வீசினார்! ஆனால் அவனோ எரிச்சல் படாமல். “என் நடிப்புக்கு இது போலப் பாராட்டுக் கிடைத்ததே இல்லை; இனிக் கிடைக்கவும் கிடையாது” என்று தலைமேல் அதனை வைத்துக் கொண்டு பாராட்டினான்.

உணர்ந்து எழுதிய எழுத்து, உணர்ந்து நடித்த நடிப்பு. உணர்ந்து பார்த்த பார்வை - இவற்றின் ஒட்டு மொத்த வெற்றி இதுவாம்

அறிஞர் பெர்னாட்சா எந்த ஒரு செய்தியையும் நாடகக் காட்சியாகவே பார்த்தார். மேடை - காட்சி - உரையாடல் - நடிப்பு-என்பனவாகவே எந்தச் செய்திப் பதிவும் ஆகிய அவரும் எடுத்த எடுப்பிலேயே வெற்றிக் கனிகளைக் கொய்துவிடவில்லை.

‘எழுத்தையே தொழிலாகக் கொள்வேன்' என்று துணிவாக ஒருமுடிவெடுத்து எழுத்தர் வேலையை விட்டுப்விட்டுப் போனார் அவர். எழுதுவதிலேயே முழுமூச்சாக இறங்கினார். ஓராண்டு