உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம்

18

ஈராண்டுகள் இல்லை; ஒன்பது ஆண்டுகள் எழுதிய எழுத்தின் வழியாக ஆறே ஆறு பவுன் தான் வருவாய் கிடைத்தது.

66

எழுதிய எழுத்தை அச்சகத்திற்கும் பதிப்பகத்திற்கும் அனுப்பு வதற்குரிய அஞ்சல் செலவுக்குக் கூடக் காசு இல்லாத நிலை. உடைகளோ கிழிவு; காலணிகளோ தையல்; வயிற்றுப்பாட்டுக்கும் திண்டாட்டம்.!ஆயினும்,கொண்டஉறுதியில் சலியாமல் உழைத்தார்! வெற்றிமேல் வெற்றி குவித்தார். “நான் வாழப்போவது ஒரே ஒரு முறைதான்! அவ்வாழ்வில் காலமெல்லாம் அழியாத என் எழுத்து முத்திரையைப் பதித்தே ஆவேன்” என்று அவர் கொண்ட முடிபும் அதனை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட உறுதியும் அவரை உலக மலைமேல் ஒளிக் கதிராக்கி விட்டதாம். தோ! ஒர் இளைஞர் புறப்படுகிறார் வேலை தேடி! அலுவலகங்கள் தொழிலகங்கள் என ஏறி இறங்கினார். எங்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. பொழுது போக்காக ஒரு நூலகத்துள் நுழைந்தார். அது பெருநூலகம்; சென்னை கன்னிமாரா நூலகம்; காலமெல்லாம் கற்கத் தக்க கடலளவு நூல்களைக் காண்ட நூலகம்; நுழைந்தவர், பன்னாள் பசித்துக் கிடந்தவர் என நூல்களைச் சுவைமிகு உணவாகக் கொண்டார்; உவகை கொண்டார்; "இனி வேலை தேடேன்; வேலை என் கைமேல் கனியாக வாய்த்து விட்டது; படிப்பேன்; படிப்பேன்; நூல்கள் படைப்பேன்; படைப்பேன் என உறுதி கொண்டார். அப்படியே எழுதிக்குவித்தார்; அவரால் - அவர் எழுத்தால் - உந்தி எழுப்பப்பட்டு உயர்ந்தவர் எண்ணற்றவர். அவர் கண்ட வாழ்க்கையில் வெற்றி, பலர் வாழ்க்கையை வெற்றியாக்கிற்று. படைப்பாளி நிலைக்குப் படிப்பாளி உயர்த்தப் பெற்ற இரட்டை வெற்றி இது! இந்த இளைஞர் இளைஞர் - எழுத்தையே தொழிலாகக் கொண்ட இந்த இளைஞர் எவர்? அவர், அப்துல்றகீம்; இப்பொழுது, எழுத்தும் கை கொடுக்கும் என்பது தெளிவாயிற்றல்லவா! இதோ! ஒரு முதியவர்! அவர் இளந்தைப் பருவத்திலே பள்ளி இறுதித் தேர்வும் எழுதாமலே படிப்பை நிறுத்தும் இக்கட்டுக்குத் தாமே நேர்ந்தவர். ஆனால், நான்கு சுவர்க்குள் மட்டுமா, கல்வி? நானிலம் எவ்வளவு விரிவானது. எத்தனை கோடி அறிவுக் குவியல்கள் உலகில் ஆர்வப் பொருள் கைம் முதலாக இருந்தால், என்ன பொருளைத்தான் வாங்க முடியாது? அவர், சமயத்திறத்தோரை, மொழிவல்லோரைத் தேடித் தேடிக் கற்றார்! பன் மொழிப் புலமை உற்றார்! பள்ளி -

""

-