உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

45

கல்லூரி - எனத் தமிழாசிரியப் பணிகள் தேடிவந்தன. ஆங்குப் பணிபுரிந்த அளவிலே அமைந்தார் அல்லர். நாட்டு விடுதலைத் தொண்டு, தொழிலாளர் தொண்டு, மகளிர் மேம்பாட்டுத் தொண்டு எனத் தொண்டுகளைத் தோளில் அள்ளிப் போட்டுக் கொண்டு நடையிட்டார்; தேசபக்தன், நவசக்தி என இதழ்களை நடத்தினார்! உரையா, பாட்டா’ ஆய்வா - எல்லாம் கை வந்த கலைகள் ஆயின. மேடைப் பொழிவில் குற்றால அருவியெனக் கொழித்தார்! அவர் பொழிவுகள் எல்லாமும் நூல்கள் ஆயின! நூல்கள் எல்லாமும் பொழிவுகள் ஆயின; அவரே நூலர் ஆனார்! அவர் பெயரைச் சொல்லவும் வேண்டுமோ? தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்.

இளமை விருந்து படைத்தவர் அவர்; முருகன் அல்லது அழகு கண்டவர் அவர்; பெண்ணின் பெருமை பேசியவர் அவர்; தமிழ்த்தென்றலும் தமிழ்ச் சோலையும் தந்தவர் அவர்; பொருளும் அருளும் அல்லது மார்ச்சீயமும் காந்தியமும் போற்றியவர் ‘அவர்; மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் எனும் நூலைப் படைத்தவர் அவர்; என் கடன் பணி செய்து கிடப்பதே எனக் கண்டு, சமயச் சார்பு கடந்து, சமயச் சால்புக்கு இலக்கியமானவர் அவர். பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் ஆகிய புகழ் வாழ்வினர் அவர். இருளில் ஒளி, முதுமை உளறல், படுக்கையில் பிதற்றல், செத்துப் பிறத்தல் என வாழ்வு நிலைகளையே தாழ்விலா நூல் ஆக்கிய தவத் தோன்றல் அவர். அவர்க்குக் கை கொடுத்த எழுத்து, அவர் பேரர் பேர்த்தியர்களாகிய இந்நாள் இளையர்க்குக் கை கொடுக்காமல் போய்விடுமா?

வரலாற்றுக் கதைப்பின்னல் என்றால் இவர்க்கு இணை

எவர் என விளங்கிய கல்கியார்.

சமுதாயப் புனைகதை உலகில் கொடி கட்டிப் பறக்கும் செயகாந்தனார்.

திரையுலக மன்னரகவும், ஈடுபடா எழுத்துத் துறை எதுவுமே இல்லை என்னவும் முத்திரை பதித்துச் சென்ற கவிஞர் கண்ணதாசனார்.

இளவயதிலேயே

எழுத்தை வரித்துக் காண்

புதுமைப்பித்தனார்; எள்ளல் சுவையை இப்படி நயம் பெற ஆள முடியுமா என வியப்பில் ஆழ்த்திய வ.ரா.