உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம்

18

நடைமுறைச் செய்திகளை நாத்தழும்பேறச் சொல்லிக் கைத் தழும்பேற எழுதிக் குவித்த பெரியார். இவர்களெல்லாம் பெரும் பெரும் பட்டந்தாங்கிகளா? பேராசிரியக் கட்டில் பெற்றவர்களா? இவர்களையெல்லாம் காலம் காலமாக நிறுத்தி வைக்கக் கை கொடுத்துள்ள எழுத்து, நமக்கு மட்டும் கை கொடுக்காமல் போகுமா?

வாழை பழம்' என்று என்று படியாதவர் எவரேனும் சொல்வதுண்டா? 'வாழைப்பழம்' என்றுதானே இலக்கணமாகச் சொல்கிறார். பூனைக்குட்டி என்று சொல்லாமல் எவராவது பூனை குட்டி என்பாரா? அப்படிச் சொல்லாத போது அப்படி எழுதலாமா?

பிண்ணாக்கை எவரும் அறிவர். ஆனால் அதனைப் பலரும் புண்ணாக்கு என்று சொல்லவும் எழுதவும் காண்கிறோம். அப்படிப் பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கரின் துணைவியார் ‘புண்ணாக்கு' என ஒரு முறை கடிதத்தில் எழுதினார். அதனைப் படித்த மாணிக்கர் ‘புண்ணாக்கு என எழுதிப் புண்ணாக்கி விட்டாய்; பிண்ணாக்கு என எழுது” என்று எழுதினார்.

தெருத்தோறும் ஊர்தோறும் நகர்தோறும் அடகுக்கடை என்னும் பெயர்ப்பலகையைப் பார்க்கிறோம். அடகு என்பது கீரை. பாரி மகளிர் படைத்த கீரைக் கறியை, ஒளவையார்,

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவு தின்பதாய் நெய்தான் அளாவி நிரையிட்டு - மெய்யாய் அடகென்று சொன்னார் அமுதத்தை

எனப்பாராட்டுகிறார்.அடகு-கீரை; அடைவு-அடவு-அடைமானம் என்பவை ஒரு பொருளை ஒப்படைத்து அதற்கு ஈடாகப்பொருள் பெறுவது ஆதலால் ‘அடவுக் கடை’ அடைவுக்கடை என்பதே பிழையற்றதாகும். எண்ணிப் பார்க்காமலே தொடர்ந்து பலரும் செய்யும் பிழை ‘அடகு' என்பதாகும்.

எழுத்து கை கொடுக்க வேண்டுமானால் உலகியல் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் உன்னிப்பாக நோக்குதல் வேண்டும். அதனை வாழ்வியல் பொருளாக்கி விட வேண்டும். தேக்கடியில் கண்டதொரு காட்சி நீர்த் தேக்கத்தில் ப படகு செல்கின்றது. விரைந்து சென்று படகைத் திடுமெனப்