உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

47

படகோட்டி நிறுத்துகிறார். திகைப்பாக நோக்குகின்றோம் படகில் இருந்த எல்லாரும். படகுக்குச் சிறிது முன்னால் பாறைகள் கிடப்பன போன்ற தோற்றம். ஆனால் பாறைகள் நகர்வது இல்லையே! இதோ பாறைகள் நகர்கின்றனவே எனக் கூர்மையாய் நோக்க அவை யானைகள் என்று கண்டு கொள்கிறோம். அவ் யானைகள் நகர்ந்து கரையேறுகின்றன. குட்டியானை ஒன்று; பெட்டை யானை இன்னொன்று; ஆண் யானை இன்னொன்று. மூன்றும் கரையேறியும் அசையவில்லை. படகைப் பார்க்கின்றன; படகின் முன்னே மெல்லென நகரும் மற்றொரு யானையையும் பார்க்கின்றன. அந்த ஆண்யானையின், தந்தை யானையோ தாய் யானையோ அது. அல்லது அந்தப் பெண் யானையின் தந்தையானையோ தாய்யானையோ அது? அதுவெளியெறியதும் ஆண் யானைக்கு உண்டாகிய மகிழ்ச்சியில் மண்ணை அள்ளித் தன் தலையிலும் மற்றவற்றின் மேலும் வீசி மகிழ்ந்தது. ஐயறிவு படைத்த அந்த யானை தன் பெற்றோரைப் போற்றும் காட்சி, ஆறறிவு படைத்த மாந்தர்க்குக் கட்டாயம் வேண்டும் அல்லவோ “முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்” என்பது சங்க இலக்கிய வரலாறு! தேக்கடிக் காட்சியோ முதியர்ப் பேணும் யானைக்காட்சி! இக்காட்சியைப்பார்வைதானே! ஊன்றி உணர்ந்த பார்வை, ஒவ்வொரு காட்சியையும் உயிரோவிய எழுத்தாக்கி விடுதல் உறுதி, எழுத்தும் கைகொடுக்கும் என்பதை நிலைப்படுத்தி விடுதலும் உறுதி.

தன் கையே தனக்கு உதவி' என்பது பழமொழி, ஒவ்வொருவரும் உணர்ந்து போற்றிக் கொள்ள வேண்டிய பழமொழி இது.

தன்னொடு பிறந்தது தன் கை; அக்கை உதவுவது போல், தன்னைப் பெற்றவரும், தன் உடன் பிறந்தாரும் தன் வாழ்க்கைத் துணையும் தன் மக்களும் கூட உதவ முடியாது என்றால், அன்பர் நண்பர் உற்றார் உறவினர் தொண்டர் தொழிலாளர் என்பவர் உதவிவிட முடியுமா? இவற்றை எண்ணினால்தான். “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்று திருவள்ளுவர் கூறியதன் அருமையும் பெருமையும் விளங்கும்.

உடுக்கை இழிந்தவன் அல்லன்; உடுக்கை இழந்தவன்; கொடியவர்களால், உடுத்திய உடையை இழந்தவன்! துணைக்கென