உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம்

18

எவருமில்லாத இடத்தில் அடாவடியாய்ப் பறித்துக் கொள்ளப் பட்டஉடை; அப்பொழுதில் உடை யை இழந்தவன் கை எப்பாடு பட்டுத் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முந்துகிறது; காத்துக் கொள்கிறது; அக்கையே மானமறையாய் விளங்குவது போல விளங்குவாரே நண்பர் என்பது 'உடுக்கை இழந்தவன்’ என்னும் திருக்குறளின் விளக்கமாகும். இவ்வுவமை. ‘தன்கையே தனக்குதவி' என்பதையும் நன்கு விளக்கிக் காட்டும்.

தமக்கு வேண்டும் சிறு சிறு தேவைகளைக்கூடத் தாமே செய்து கொள்ளாதவர் உளர். தம் படுக்கையைச் சுருட்டிவைக்க, தம் பல்லைவிளக்க, தாம் குளிக்க, தாம் உடுத்திக் கொள்ள, தம் அலுவலகப் பொருள்களை எடுத்துக் கொள்ள இப்படி ஒவ்வொன்றுக்கும் பிறரையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - வளர்ந்தும் வளராத குழந்தை போன்றவர் - செல்வச் செழிப்பிலே விளங்குகின்றவர் - ஆள் அரவணைப்பிலே பொழுது கழிப்பவர் - -ஆள் அவற்றை இழக்கின்ற ஒரு நிலைக்கு ஆட்பட்டுவிட்டால்-என்ன பாடுபடுகின்றனர்; மலையே நிலை சாய்ந்து உருள்வது போல உருளும் நிலை உண்டாகிவிட்டால், அவர்கள் எவ்வளவு வருந்தத் தக்கநிலையில் - தலைமேல் கைவைத்துக் கொண்டு தவிக்கின்றனர்! ஆனால், ‘தன் கையே தனக்குதவி’ என வளர்ந்து வாழ்ந்து கொள்ளப் பழகியிருந்தால் சூறைக் காற்றுப் போல் வாழ்க்கையில் மோதல்கள் ஏற்பட்டாலும் உறுதியான மலைபோல் நிலைகுலையாது தாங்கிக் கொள்வார்கள் அல்லவா!

தம்மால் செய்யக் கூடிய செயலைத் தாம் செய்யாமல் பிறரை எதிர்பார்த்து இருப்பதால் தம் தேவை காலத்தில் நிறைவேறுமா? வேண்டும் போதெல்லாம் வேண்டும் வகையால் கிட்டுமா? உதவிக்கு வருபவர்களுக்கும், அவர்கள் தம் கடமையைச் செய்வதற்கு எத்தனை குறுக்கீடுகள்!எத்தனை அலுப்பு சலிப்புகள்! அவர்கள் உதவியை நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது போல், நம் உதவியை அவர்கள் எதிர்பார்த்தால் அது தவறாகுமா? இவற்றையெல்லாம். 'தன் கையே தனக்குதவி’ என்பதை அறியாதவர், அறிந்து கொள்வதில்லை! அறிந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை! ஆனால், எவரும் துணைக்கு வராத ஒரு நிலை எதிர்பாராமல் உண்டாகி விடும் போதுதான், முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் தவிக்கினறனர் பின்னே நினைத்து என்ன பயன்? முன்னே அல்லவோ எண்ணியிருக்க வேண்டும்!.