உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

49

தம்மால் முடியும் செயலைத் தாமே செய்து கொள்ளாமல் பிறரைக் கொண்டு செய்து கொள்ளலாம் என்று இருப்பவரை. 'வெந்நீரிலேயே நீராட முடியாதவர் வேகும் நெருப்பிலே வீழ்வாரோ?” என்று வினாவுகிறது பழமொழி நானூறு. “பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ” என ஒரு பழமொழியையும் அது தருகிறது.

நம் உடல் என்பது என்ன? மூளை மட்டுமா? கண் மட்டுமா? காதுமட்டுமா? இல்லையே உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள எல்லாமும் சேர்ந்தது தானே உடல். தலைமுடி நமக்கு எத்தகு தேவையானது! நகம் எவ்வளவு வேண்டத் தக்கது! பல் ஆட்டம் போட்டால் என்ன நிகழ்கிறது! ஒரு மூட்டு விலகி விட்டால், அதன் விளைவு என்ன? எந்த உறுப்புத் தான் பயனற்ற உறுப்பு? எல்லா உறுப்புகளின் ஒருமித்த இயக்கமும் இல்லாமல் வாழ்வில் முழுநிறைவு உண்டா! அப்படியானால் அவ்வுறுப்புகளை இயக்கமுடையதாக வைத்திருக்கத் தவறலாமா? காலையும் கையையும் பயன்படுத்தினால் என்ன ஆகும்?

இரும்பு பயன்படுத்தப் பயன்படுத்த வலுவாக இருக்கிறது! கூராகவும் சீராகவும் வலிவாகவும் பொலிவாகவும் விளங்குகின்றது. அதனைப் பயன்படுத்தாமல் சிலகாலம் போட்டுவிட்டாலே, அதில் உண்டாகிய துருவே அதனை அழித்து விடுகின்றதே! யார் அதனைக் கொடுத்தார்? பயன் படாத நிலையே அதற்கு அழிவாகி விட்டதல்லவா! அது போல், பயன்படுத்தாத உறுப்புகள் தாமே சோர்ந்து செயலிழந்து கெட்டுப் போகின்றன! ஆன பின்னே அழுது ஆவதென்ன? தொழுது ஆவதென்ன? ஆனது ஆனதேயாம்!

தன் கையே தனக்கு உதவி என்பதைக் கடைப்பிடியாகக் கொண்டவர்கள் தந்நம்பிக்கையாளர்களாக விளங்குகின்றனர்; எத்தகைய இக்கட்டையும் தாங்கிக் கொள்ளும் வலுவைத் தாமே பெறுகின்றனர். எந்த நெருக்கடியையும் தாமே தீர்த்துக்கொள்ளும் பக்குவத்தையும் உறுதிப் பாட்டையும் இயல்பாகப்பெறுகின்றனர் அதனால் எத்தகைய வளமும் வாழ்வும் உடையவர் எனினும் தம் நலம் கருதியேனும் 'தன் கையே தனக்குதவி' என்பதைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

66

உயர்ந்த நிலையிலே உன்னை நிறுத்த விரும்புகிறாயா? உன்னை உயர்ந்த நிலையில் இருந்து கீழே தள்ளிக்