உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கொள்ள நினைக்கிறாயா? இருக்கும் நிலையில் இருந்து மேலேமேலே உயர்த்திக் கொள்ள நினைக்கிறாயா? உன்னைப் பிறர்பிறர்க் கெல்லாம் தலைமையாளனாக ஆக்கிக் கொள்ள முனைகிறாயா? - இவையெல்லாம்

பிறர்தர வருவன அல்ல! நீயே ஆக்கிக் கொள்ள அமைவன

என்கிறது நாலடிப் பாடல் ஒன்று. இந்நிலையை ஒருவர் அடையக் கருதினால், அவர் கற்றுக் கொள்ள வேண்டிய முதற்பாடம், 'தன் கையே தனக்குஉதவி' என்பதாம்.

"சரித்திரத் தேர்ச்சி கொள்" என்பது பாரதியார் பாடிய புதிய ஆத்திசூடி.

சரித்திரம் என்பது என்ன? வரலாறே அது. மழை பொழிந்தது; நீர் திரண்டது: மேட்டில் இருந்து அது பள்ளம் நோக்கிப் பாய்ந்தது: நிலத்தை அறுத்துக் கொண்டு நீர் ஒடியது; அது, ஆறு என்பதற்கு வழி என்னும் பொருள் உண்டாகியது.

வையை யாறு வரும் வகையைக் கூறும் பரிபாடல்.

‘யாறு வரல் ஆறு'

என்கிறது.‘வரல் ஆறு' என்னும் இரண்டு சொற்களையும் சேர்த்துச் சொன்னால் ‘வரலாறு’ ஆகிவிடும் அல்லவா! ஆற்றுக்கு வரலாறு இருப்பது போல் மக்களுக்கும் வரலாறு உண்டு; நாட்டுக்கும் மொழிக்கும், இலக்கியம் இலக்கணம் முதலிய கலைகளுக்கும், அறிவியல் அரசியல் முதலிய துறைகளுக்கும் - வரலாறு உண்டு. வரலாற்று உலகம் பழமையானது; விரிவானது! என்று தோன்றியது' என்று அறிய முடியாத உலக வரலாறு, எவ்வளவு பெரியது! அறிய அறியப் பெருகி விரிவதன்றோ அது!

வரலாறு அல்லது சரித்திரத்தை அறிந்து ஆராய்ந்து அதில் தேர்ச்சி கொள்வது எதற்காக? அத் தேர்ச்சியால் உண்டாகும் பயன் என்ன? என்று எண்ணத் தோன்றும்

-

நாம் வேளைதோறும் உண்கிறோம்; விரும்பியவாறு உடுக்கிறோம்; வேண்டும் பொருள்களைக் கொள்கிறோம்; வாய்ப்புகளை அடைகிறோம் இவையெல்லாமும் நாமே உழைத்து உண்டாக்கியவையா? நாமே கண்டு பிடித்துக் கொண்டவையா? நம் உணவில் எத்தனைபேர் உழைப்பு; நம் உடையில் எத்தனை பேர் உழைப்பு? நம் வாழ்வுக்கு எத்தனை