உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம்

18

பட்ட விலை, மதிப்பில் அடங்குவதா? எத்தனை பேர் சிறையுற்றனர்? எத்தனை பேர் உடைமை இழந்தனர்? எத்தனை பேர் நாடு கடத்தப்பட்டனர் எண்ணிச் சொல்ல இயலுமா? விடுதலை வரலாற்றை மெய்யாக அறிந்தால் தானே, அதன் பெருமையை உணர முடியும்! அதனை நன்கு அறிந்தால் தானே, பெற்ற விடுதைையப் பேணிக் காக்க முடியும்!

-

-

கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் வரலாற்றை அறிவதால் அவர் ஈகமாகிய தியாகம் மட்டுமோ விளங்குகின்றது! எந்த அயலாரை எதிர்த்துக் கப்பலோட்டினாரோ, அதே அயலார்க்கே, அவர் வாங்கி ஒட்டிய கப்பலை விற்றதாகிய கொடிய வரலாறு நம்மை மீள் பார்வை பார்க்கச் சொல்கிறது அல்லவா! ஒரு மொத்த உறுதியாக நிற்க வேண்டிய நாட்டு விடுதலைப் போரிலேயே, ஒன்றுபட்டு நில்லாமை ஒரு பெருங் கேடென உணர்த்துகிறது இல்லையா? ஓரிலக்கம் ரூபாயைக் கையூட்டாகத்தந்து கப்பலோட்டாதீர் என்று அவரை வயப்படுத்த வந்தவர் உரைத்தபோது, காறி உமிழ்ந்து பணத்தைத் தூக்கி எறிந்து வரலாற்றுத் தேர்ச்சி, நம் வாழ்வில் இருக்குமானால் நாட்டில் கையூட்டுக்கு இடமிருக்குமா? ஆதலால், ‘சரித்திரத் தேர்ச்சி கொள்க' என்பது இன்று மட்டுமன்று என்றுமே நல்ல பாடம்! “செய்தக்க அல்ல செயக் கெடும்" என்பதையும் "செய்தக்க சய்யாமையானும் கடும்" என்பதையும் மெய்யாக உணர்த்துவது- சரித்திரத் தேர்ச்சி கொள்வதேயாம்!

6

"செய்வது துணிந்து செய்க” என்பது பாரதியார் பாடிய புதிய ஆத்திசூடி, துணிந்து செய்வது என்றால் நல்லது பொல்லது ஆகிய இரண்டையும் துணிந்து செய்வதா? இல்லை: நல்லது செய்வதைத் துணிந்து செய்க என்பதேயாம்.

பலர் கூடிநிற்கின்றனர்;அங்கே சொல்லக்கூடாத சொல்லை ஒருவர் சொல்கிறார்.; அல்லது செய்யக் கூடாத செயலைச் செய்கிறார். பலரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்க அனைவரும்வாரார். அனைவரும் வரவில்லை என்பதற்காக உணர்வுடையர் ஒதுங்கி விடுவது இல்லை. அப்பலர் கூட்டத்தில் இருந்து ஒருவர் தனியே முன்வந்து தவற்றைத் தட்டிக் கேட்கிறார். பலரிடையில் இருந்து துணிந்து- துண்டுபட்டு-த் தட்டிக் கேட்கும் அவர் துணிவுடையவர்,