உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

53

துணிந்தவர் எனப்படுகிறார். ஆதலால் பிறர்க்கில்லாமல் ஒருவர்க்குச் சிறப்பாக அமைந்த முற்போக்குத் தன்மையே துணிவு என்பதாம்.

செய்ய வேண்டிய செயலை நல்லதா அல்லதா என முதலாவதாக நன்கு ஆரய வேண்டும். செய்யக் கருதிய செயல், அச் செயலைச் செய்யும் வகை, செய்யும்போது உண்டாகும் தடை, அத்தடையை மீறி வெற்றி கொள்ளும் வகை - என்பவற்றை யெல்லாம் தெளிவாக பின்னர்ச் சோர்தல் இல்லாமல் செய்யலாமா செய்யக் கூடாதா' என்னும் ஐயமில்லாமல் 'வெற்றி பெறுவோமா மாட்டோமா' என்னும் தயக்கம் இல்லாமல் செய்து முடித்தல் வேண்டும். இதனைக் கருதியே, செய்வது துணிந்து செய்க' என்றனர். இதனைத் திருவள்ளுவர். எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு”

என்றும்

எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்

என்றும் கூறினார்.

99

துணிவு என்பது முரட்டுத் தனமன்று; முறைகேடும் அன்று; உள்ளத்தின் உறுதியே துணிவாகும்; நேர்மையே துணிவின் வழியாகும். ஒருவன் உள்ளத்தின் உறுதியோடும், நேர்மை யோடும் ஒரு செயலைச் செய்வதற்குத் துணிந்து விட்டால் பலரும் கைகொடுக்க முந்தி நிற்பர். எடுத்த செயல் வெற்றியாக முடிந்தே தீரும்.

ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்கிவிடுவதும், தொடங்கிய பின்னர் ஊக்கமில்லாமல் தயங்குவதும் இரு மடங்கு அழிவைத் தரும்! நீர்ப் பெருக்கைக் கண்டு நீந்திச் செல்ல முடியுமா முடியாதா எனக் கரையில் இருக்கும் போதே எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப்பாராமல் நீர்ப்பெருக்கில் விழுந்துவிட்டு அதன் பின்னர் நீந்தமுடியுமா முடியாதா எனத் தளர்ந்தால் வெள்ளத்தில் இருந்து தப்ப முடியுமா? மனத்தில் ஐயம் உண்டாகி விட்டாலே அழிவு வந்து விட்டது என்பது தானே பொருள்!

6