உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம்

18

யானையின் உருவம் எவ்வளவு பெரியது? அதற்குரிய கொம்புகளும் எவ்வளவு வலியவை! கோட்டையையும் இடித்து வீழ்த்தும் ஆற்றல் அந்தக் கொம்புகளுக்கு உண்டே! அத்தகைய யானையையும் அதற்குப் பாதியளவு தானும் உடல் இல்லாத புலி, கொம்பு இல்லாதபுலி - வெற்றி கொண்டு விடுகிறதே! எதனால்? உள்ளத்தின் வலிமையினால் தானே! இதனால் தான். பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின்

66

என்கிறது திருக்குறள்

ஒரு

பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் இளைஞனாக இருந்தான்; இவன் எங்களை என்ன செய்து விடுவான் எனப் பிற வேந்தரும் குறுநில மன்னரும் இகழ்ந்து பேசினர்; இதனைப் பாண்டியன் அறிந்தான்; என்னை இளையவன்; அதனால் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்த இவ்வேந்தர்கள் எவ்வளவு வலியவர்கள் ஆனால் என்ன? எத்தனை படைப்பெருக்கம் உடை யவர்களாக இருந்தால் என்ன? இவர்களை மொத்தமாக அழியாவிட்டால் என் குடிமக்கள் என்னைக் கொடியவன் என்று கூறுவாராக: என்னைப் பாடும் புலவர்கள் பாடாது ஒழிவாராக; என்னிடம் ஒன்றை வேண்டுவோர்க்கு அதைக் கொடுக்க முடியாத வறுமை எனக்கு வருவதாக என வஞ்சினங் கூறிப் போருக்குச் சென்றான்; பகைவரை வென்றான்; தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அழியாப் பெயரைக் கொண்டான்; துணிவு தந்த வெற்றி தானே இது;

இன்றைக்கு என்ன செய்வோம் என ஏங்கிக் கிடந்த ழையர் எத்தனை பேர்கள் துணிவாகத் தொழிலில் இறங்கிப் பெருஞ்செல்வராகி உள்ளனர்!

எமக்குத் தாயும் தந்தையும் உதவுவாரும், இல்லையே என்ற நிலையில் இருந்தவர் எத்தனை பேர்கள். தம் இடைவிடா ஊக்கத்தால் எத்தகைய உயர்ந்த நிலைகளையெல்லாம் அடைந்துள்ளனர்

6

இருந்த செல்வமெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் கடலில் மூழ்கியது போல் கடனில் மூழ்கிப் கடனில் மூழ்கிப் போக, ஊக்கத்தை இழக்காமல் பாடுபட்டு, இழந்ததனினும் பன்மடங்கு தேடி