உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

மற்றவர்கள் மூக்கிலே விரல் வைத்து வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்கள் உள்ளனர்!

55

நோக்குமாறு

காலும் கையும் இயக்கமற்றுப் போன நிலையிலும், கண்ணும் காதும் செயல்படா நிலையிலும், அவற்றை நன்றாக வாய்க்கப் பெற்றவர்களும் கூட அடைய முடியாத பெருமையை அடைந்தவர்களும் உலகில் இருந்தனர்; ருந்தனர்; இருக்கின்றனர்;

அதனால் தான்,

66

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

என்றார் திருவள்ளுவர்.

ஒன்றே செய்க; ஒன்றும் நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க; இன்றும் இன்னே செய்க; இன்னேயும் துணிந்து செய்க எனப் பழந் தொடரை நீட்டிக் கொள்ளல் ஏற்ற செய்கையாம்.

66

செய்வது துணிந்து செய்தால்

சேர்ந்தது வெற்றி யாமே

கொய்வது கனியே என்றால்

கொள்வது சுவையே யன்றோ

உழைத்தால் உயர்வு என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும். நான்கை நான்கால் பெருக்கினால் பதினாறு என்பது எப்படி மாறாத உண்மையோ, நான்கொடு நான்கைக் கூட்டினால் எட்டு என்பது எப்படி மாறாத உண்மையோ, அப்படி மாறாத உண்மை யானது ‘உழைத்தால் உயர்வு' என்பதாகும்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பது நம்மவர் மொழி. உழைப்பின் வாரா உறுதிகள் இல்லை என்னும் தேர்ச்சியால் வெளிப்பட்ட தொடர் அது.

கல்வியில் மேம்பட்டு நிற்பவரா, செல்வத்தில் ஓங்கி இருப்பவரா, வாணிகத்தில் வளம் கொழிப்பவரா, புதியவை கண்டு பிடிப்பதில் புகழ் தாங்கியவரா, புனைகதைத் திறத்தில் சிறந்தவரா, ஆடல் பாடல் இசை நாடகம் சிற்பம் ஓவியம் ஆகிய கலைத்துறைகளில் மணம் பரப்புபவரா,களரிப் பயிற்சிகைவந்தவரா, ஒட்டப்பந்தயம் முதலான உலக விளையாட்டுகளில் வெற்றிக் காடி நாட்டுபவரா நாவன்மை மிக்க நாவுக்கரசராகத் திகழ்பவரா, எவரையேனும் கண்டு, “உங்கள் உயர்வுக்கும்