உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம்

18

வெற்றிக்கும் காரணம் என்ன?” என்று கேட்டால், அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தமான ஒரு விடை. "உழைப்பு, உழைப்பு, என்பதேயாம்.

"முயற்சி திருவினை ஆக்கும்" என்பார் திருவள்ளுவர் "முயற்சி இல்லாமை இல்லாமைக்குள் தள்ளிவிடும்” என்று அவரே கூறுவார். அவர் கூறும் “திரு” என்பது “செல்வம்” என்னும் அளவில் சுருங்கி விடுவது அன்று. உயர்ந்தவை, சிறந்தவை, மேலானவை,இன்றியமையாதவை என்றுஎவற்றையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ, அவற்றை யெல்லாம் குறிக்கும் அருமையான அழகான சொல்லே 'திரு' என்பதாம். திருவின் பெருமையைத் திருக்கோவையார்க்கு உரை கண்ட பேராசிரியர் “திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ கொண்டது என்பார்.

99

முயற்சியாளனுக்கு- உலகமே கைக்குள் இருப்பதாகி விடும்

என்பதை.

66

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்”

என்பார் திருவள்ளுவர்.

முயலும் ஆமையும் போட்டியிட்டு, ஆமையினிடம் முயல் தோல்வியுற்ற கதையைக் கேளாதவர் எவர்? எது என்ன, முயல் ஆமை ஆகிய உயிரிகளைப் பற்றிய கதையா? இல்லை முயலாமைக் கேட்டை விளக்கும் கதையாகும். முயல் ஆமை என்னும் இரண்டு சொற்களையும் சேர்த்தால் ‘முயலாமை என்பது தானே.

உழைப்பு மாந்தரின் பிறவிக் கடன்! உலகவர் உழைப்பால் உண்பவர், உடுப்பவர், உறைபவர் உழைப்பைக் கடமையாகக் காள்ளவில்லை என்றால், அவர் கடனாளி தானே. உலகப் பொதுவுக்குச் செய்தே ஆக வேண்டிய கடமையைச் செய்யாத கடன்காரன், கடன்காரருள் எல்லாம் தலையான கடன்காரன்.

.

எவ்வளவு சிறிய சிட்டுக் குருவி--அயர்ந்து கிடக்கிறதா அது? எவ்வளவு சிறிய மண்புழு-ஓய்ந்து கிடக்கிறதா அது? எவ்வளவு சிறிய எறும்பு அதன் முயற்சிக்கு இணை

உண்டா?

-