உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

57

எவ்வளவு சிறிய தேனீ - அதன் சுறுசுறுப்புக்கு இணை அது

தானே?

இச்சிறிய உயிரிகளின் முயற்சியையும் உழைப்பையும் கண்ணாரக் கண்டு வரும் ஆறறிவுப் பிறப்பாகிய நாம் சோம்பிக் கிடக்கலாமா?

உழைப்புக்கு ‘ஆள் வினை' என்பதொரு பெயர். ஆள்வினை என்பது என்ன? ஓர் ஆளின் ஆளுமைச் செயற்பாடுதான் ஆள்வினை! ஆள் என்பது ஆணா,பெண்ணா, பிள்ளையா? இம் மூவரையும் குறிப்பதே ஆள் ஆகும். “எத்தனை ஆள்கள் என எண்ணிப்பார்” என்றால் ஆண், பெண், பிள்ளை ஆகிய அனைவரையும் குறிப்பது தானே ‘சிற்றாள் வேலை எட்டாள் வேலை' என்னும் பழமொழி நாம் அறியாததா? ஆதலால், ஆள்வினை என்னும் சொல்லே, "நீ உழைக்கப் பிறந்தவன், உழைப்பால் உயரப் பிறந்தவன்" என்பதைப் பறையறைவதாம்.

66

தளர்மனம்!

66

ச்செயலைச் செய்ய என்னால் முடியுமா?" என்பது

வீழ்ச்சி மனம்!

சயலைச் செய்ய என்னால் இயலாது” என்பது

66 ச் செயலைச் செய்ய என்னால் முடியும்” என்பது துணிவு மனம்!

66

ச் செயல் என்ன, இதனினும் அருஞ்செயலையும் செய்வேன்” என்பது வெற்றி மனம்!

66

இவர் இவர் எல்லாம் பெற்ற வெற்றியை என்னால் ஏன் பெற முடியாது?” என்று எண்ணி உறுதியாக உழைப்பவர் எவரும் உயர் நிலையை அடைந்தே தீர்வர். இதனையே,

66

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்”

என்று கூறுகிறது முப்பால்

1

உழைப்புக்கு எதிரிடை, சோம்பல், அதற்கு இலக்கியத் தமிழ்ச் சொல் ‘மடி' என்பது. மடி என்னும் சொல், நமக்கு என்ன சொல்கின்றது?